Sunday, August 24, 2008

ஒட்டகச் சிவிங்கியின் காதல்

மைசூர் விலங்கியல் பூங்காவுக்கு 17.8.2008 அன்று சென்றிருந்தேன். அங்கு பலவித விலங்கினங்கள் வீற்றிருந்தன. ஆயினும் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது ஒட்டகச் சிவிங்கி. நீண்ட கழுத்துடன், பார்க்க மிகவும் சாதுவாக இருந்தது.



உள்ளே பல இடங்களுக்கும் சுற்றிவிட்டு வெளியே வருகையில் ஓர் அரிய காட்சியைக் கண்டேன். ஆம்! ஓர் ஆண் ஒட்டகச் சிவிங்கி, ஒரு பெண் ஒட்டகச் சிவிங்கியை ஒட்டி உரசி உடலுறவு கொள்ள முயன்றது. ஆனால், பெண் சிவிங்கி விலகி விலகிச் சென்றது. ஆணோ விடவில்லை. பெண் போகும் இடத்திற்கு எல்லாம் பின்னாலேயே சென்றது. அதன் மீது ஏறுவதற்கு முயன்றது.









நான் அடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் உடனே கிளம்பிவிட்டேன். எனவே, ஆணின் முயற்சி வென்றதா என்று தெரியவில்லை. :) :(

Saturday, August 23, 2008

அழகிய புற்று

16.8.2008 அன்று பெங்களூர் சென்றிருந்தேன். அங்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு (HAL) எதிரே தற்செயலாக இந்தப் புற்றினைக் கண்டேன். பார்த்தவுடன் கண்ணைக் கவரும் விதத்தில் இதன் கட்டுமானம் அமைந்திருந்தது. எறும்பு, கறையான் போன்றவை கட்டிய புற்றுகளை முன்பு கண்டதுண்டு. ஆனால், இந்தப் புற்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழில்மிகு சீரமைப்புடன் விளங்குகிறது. இதைக் கட்டிய உயிரினம் எதுவாக இருக்கும்?