Saturday, June 30, 2007

கோனாரக் சூரிய கோயிலில்

ஒரிசாவில் உள்ள கோனாரக் சூரிய கோயிலின் கலைச் சிறப்புகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும் அவற்றின் அழகை முழுவதும் அள்ளி வந்துவிட முடியாது.

கல்லிலே கலைவண்ணம் கண்டான் என மாமல்லபுரச் சிற்பங்களைச் சொல்வோம். கோனாரக்கில் சிற்பக் கலையின் வேறு ஓர் உன்னதத் தோற்றத்தை நாம் காணலாம்.

இங்கு நான் கண்ட, பதிந்த சில காட்சிகள், உங்கள் பார்வைக்காக:

Photo Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வழிகாட்டி இந்த இடத்தைப் பற்றி விவரிக்கிறார்Photo Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at Photobucketபெண் ஒருத்தி, கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, தன் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்கிறாள்.Photo Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at Photobucketஇங்கு என் அம்மா

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucketஇங்கு நான்Photo Sharing and Video Hosting at Photobucketகோனாரக்கினைப் பற்றிய பல விவரங்களை அறிய மத்திய அரசின் இணைய தளம்: http://konark.nic.in/index.htm

வேறு ஒரு இணைய தளம்:

http://www.templenet.com/Orissa/konark.html

விக்கிபீடியா பதிவு:

http://en.wikipedia.org/wiki/Konark

பூரி நகரத்தில் சில காட்சிகள்

ஒரிசாவின் பூரி நகரம், இன்னும் பழைமையான தோற்றத்தோடுதான் விளங்குகிறது.

நான் பார்த்த அளவில் கோயில்களும் அவற்றைச் சார்ந்த வியாபாரமும்தான் பெரிய அளவில் உள்ளது. எல்லாக் கோயிலிலும் உண்டியல் இருக்கிறதோ, இல்லையோ பூசாரி என்ற பெயரில் இருப்பவர், தட்சணை கொடு என்று தவறாமல் கேட்கிறார். சிலர் கையில் ஒரு பிரம்பு வைத்துக்கொண்டு, வரும் பக்தர்களின் தலையில் தட்டுகிறார்கள். தட்டியவர்களிடம் தட்சிணை கேட்கிறார்கள். தராதவர்களை விடுவதில்லை.

கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பே எங்கள் வழிகாட்டி, இப்படி தலையில் தட்டிப் பணம் கேட்பார்கள் என்று சொல்லி வைத்துவிட்டார். எனவே தட்ட வந்தவர்கள் பக்கத்தில் செல்லாமல் தள்ளியே சென்றோம்.

இந்த நகரத்தில் நான் கண்ட சில காட்சிகள் இங்கே:

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு கோயிலின் உள்ளே உள்ள காட்சி இது. இவற்றையும் மக்கள் வணங்கி செல்கிறார்கள்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரிசாவின் பூரி கடற்கரையில்

சென்னை மத்திய தொடர் வண்டி நிலையத்தில் ஏப்ரல் 22 அன்று காலை, 70 பேர் கொண்ட குழுவினருடன் எங்கள் சுற்றுலா தொடங்கியது. நாங்கள் முதலில் சென்றது, ஒரிசாவுக்குத்தான். 23 அன்று மதியம் பூரிக்குச் சென்று சேர்ந்தோம்.

பூரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில், லிங்கராஜா கோயில் உள்பட பல கோயில்களைச் சுற்றிப் பார்த்தோம். பெரும்பாலான கோயில்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை; கோயிலுக்குள் புகைப்படக் கருவி, செல்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்லவே அனுமதி இல்லை. வெளியில் ஒருவரை நிறுத்தி வைத்து இவற்றை எல்லாம் கொடுத்துவிட்டுத்தான் நாங்கள் உள்ளே செல்ல வேண்டியதாய் இருந்தது. ஜெகந்தாதர் கோயிலுக்கு என்று தனிக் காவல் படை உள்ளது. அவர்கள் எல்லோரையும் சோதித்துப் பார்த்துத்தான் உள்ளே அனுப்புகிறார்கள்.

ஒரிய கட்டடக் கலையும் சிற்பக் கலையும் வெகு சிறப்பாக இருந்தது. வரி வரியாக வேலைப்பாடுகள் நிரம்பிய கோபுரங்கள், பார்க்கப் பார்க்கச் சலிக்காதவை. அந்தக் கோபுரங்களின் மீதும் மதில், பிரகாரம், மரங்கள் எனப் பல இடங்களிலும் குரங்குகள் தாவித் திரிந்தன. என் கண் எதிரில் ஒரு மூதாட்டியின் கையிலிருந்த வாழைப் பழத்தை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்று உண்டது. அந்த அம்மா, சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

கோயிலுக்குள் ஏராளமானோர் பெருந்தொப்பையுடன் உலவினார்கள். அங்கு அன்னதானம் போடப்படுகிறது என்பது உபரி செய்தி. நம்மூரில் பொதுவாக மண்பானை என்றால் அடி பெருத்தும் கழுத்து சுருங்கியும் இருக்கும். ஆனால், அங்கு அடியிலிருந்து நுனி வரைக்கும் ஒரே அளவில் அகலமான மண் பானைகள் இருந்தன. அவற்றில் வழிய வழிய உணவு படைத்து, வரும் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

பூரி ஜெகந்நாதர் தேர்த் திருவிழா, மிகவும் புகழ் பெற்றது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு பார்த்ததுண்டு. அந்தத் தேர் செல்லும் அகலமான சாலைகளைக் கண்டேன். ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய தேர்கள் செய்வது வழக்கமாம். அதற்கு ஏற்ப தேர் செய்வதற்கான பெரிய பெரிய தூண்கள், சாலையோரங்களில் கிடந்தன.

இவற்றில் எதையும் படம் எடுக்க முடியாத நிலையில் மாலையில் பூரி கடற்கரைக்குச் சென்றோம். அங்கு நான் எடுத்த சில படங்களை இங்கே பாருங்கள்:

அலை அடிக்கிறது

Photo Sharing and Video Hosting at Photobucket

கொடி அசைகிறது

Photo Sharing and Video Hosting at Photobucket

காளை நிற்கிறது

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒட்டகத்தில் ஒரு சவாரி

Photo Sharing and Video Hosting at Photobucket

குதிரை சவாரி

Photo Sharing and Video Hosting at Photobucket

நாய்கள் உறங்குகின்றன

Photo Sharing and Video Hosting at Photobucket

காஃபி, தேநீர் வியாபாரம் நடக்கிறது

Photo Sharing and Video Hosting at Photobucket

பை விற்கிறாள் இந்தப் பைங்கிளி

Photo Sharing and Video Hosting at Photobucket

சங்கு விற்கிறார் இவர்

Photo Sharing and Video Hosting at Photobucket

குழந்தைகள் கட்டிய மண்கோபுரங்கள்

Photo Sharing and Video Hosting at Photobucket

கடற்கரையில் நான்; என் படங்களை மட்டும் எடுத்தவர் என் அப்பா குப்புசாமி

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

கடற்கரையில் என் அம்மா சவுந்திரவல்லி

Photo Sharing and Video Hosting at Photobucket

கடற்கரையில் என் அப்பா குப்புசாமி

Photo Sharing and Video Hosting at Photobucket

எவரெவரோ விட்டுச் சென்ற பாதச் சுவடுகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

நேபாளத்தில் தமிழ்ப் பெயர்ப் பலகை

இரவு நேரம்; மழை தூறத் தொடங்கியது; பேருந்திற்குள் நான்; நேபாளத்தின் காத்மண்டு நகரிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள காசியை நோக்கிப் புறப்படத் தயாராய் எங்கள் பேருந்து. அப்போதுதான் அந்தத் தமிழ்ப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். நேபாளத்தில் தமிழா என வியந்தேன். பேருந்திலிருந்து இறங்கி அருகில் செல்ல அவகாசம் இல்லை. ஓட்டுநர், வண்டியை உசுப்பிவிட்டார்.

பேருந்தில் இருந்தவாறே புகைப்படக் கருவியின் zoom என்னும் கூர்மத்தை உச்சபட்ச அளவில் நுணுக்கிப் படம் பிடித்தேன். இந்தப் பலகையில் உள்ள தமிழைப் படிக்க உங்கள் கண்களையும் கொஞ்சம் நுணுக்க வேண்டியிருக்கும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Wednesday, June 27, 2007

முதுகில் ஒரு சவாரி

நேபாளத்தில் பக்தபூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு வெளியே வரும் வழியில் இந்த அம்மையைக் கண்டேன். மலைவாழ் மக்களின் வழக்கப்படி, குழந்தையைத் தன் முதுகில் கட்டித் தொங்கவிட்டிருந்தார். அதுவும் அழுது அடம் பிடிக்காமல், சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. அதனால் அவர், தன் பாட்டுக்கு வேலையைத் தொடரலாம் இல்லையா!

Photo Sharing and Video Hosting at Photobucket

ஜான்சிராணி லட்சுமி பாய், போர்க்களத்திற்குச் சென்றபோது, தன் குழந்தையை இப்படித்தான் முதுகில் கட்டிக்கொண்டு சண்டையிட்டார் எனக் குறிப்புகள் உள்ளன.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா

நேபாளத்தில் பக்தபூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு வெளியே வரும் வழியில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அங்கிருந்து சிறுவன் ஒருவன் என்னை எட்டிப் பார்த்து வசீகரமாகச் சிரித்தான்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Sunday, June 24, 2007

பாம்புக் குளத்தில் நான்

நேபாளத்தின் பக்தபூர் அரண்மனையினுள் பாம்புக் குளம் ஒன்று உள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

செவ்வக வடிவக் குளத்தின் நடுவில் செங்குத்தான தூண் ஒன்றில் ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

அதற்கு நேர் எதிரே இன்னொரு பாம்பு உற்றுப் பார்த்தபடி இருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

குளத்தின் விளிம்பு முழுவதும் ஒரு நீண்ட பாம்பு படுத்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

குளத்தில் உள்ள நீர், பாசி படர்ந்து உள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

நானும் என் அம்மாவும் சேர்ந்து இருக்கும் படங்களை அவ்வழியே வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்தார். மீதம் உள்ள படங்களை நான் எடுத்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

யாரும் குளிக்காத குளம்

நேபாளத்தின் பக்தபூர் அரண்மனையினுள் யாரும் குளிக்காத குளம் ஒன்று உள்ளது!

Photo Sharing and Video Hosting at Photobucket

மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த அந்தக் குளம், இப்போது பாசி படர்ந்து காணப்படுகிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

யானை வாயிலிருந்து நீர் கொட்டுவது போல் வடிவமைக்கப்பட்ட இந்தக் குளத்தின் கரையில் சிறு கோயில் ஒன்றும் உள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

தரையை விடத் தாழ்வாக இது அமைந்துள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

இங்கு நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார்; நான் இல்லாத பாடங்களை நான் எடுத்தேன்.