இரவு நேரம்; மழை தூறத் தொடங்கியது; பேருந்திற்குள் நான்; நேபாளத்தின் காத்மண்டு நகரிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள காசியை நோக்கிப் புறப்படத் தயாராய் எங்கள் பேருந்து. அப்போதுதான் அந்தத் தமிழ்ப் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். நேபாளத்தில் தமிழா என வியந்தேன். பேருந்திலிருந்து இறங்கி அருகில் செல்ல அவகாசம் இல்லை. ஓட்டுநர், வண்டியை உசுப்பிவிட்டார்.
பேருந்தில் இருந்தவாறே புகைப்படக் கருவியின் zoom என்னும் கூர்மத்தை உச்சபட்ச அளவில் நுணுக்கிப் படம் பிடித்தேன். இந்தப் பலகையில் உள்ள தமிழைப் படிக்க உங்கள் கண்களையும் கொஞ்சம் நுணுக்க வேண்டியிருக்கும்.
No comments:
Post a Comment