நேபாளத்தில் பக்தபூர் அரண்மனையைப் பார்த்துவிட்டு வெளியே வரும் வழியில் இந்த அம்மையைக் கண்டேன். மலைவாழ் மக்களின் வழக்கப்படி, குழந்தையைத் தன் முதுகில் கட்டித் தொங்கவிட்டிருந்தார். அதுவும் அழுது அடம் பிடிக்காமல், சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. அதனால் அவர், தன் பாட்டுக்கு வேலையைத் தொடரலாம் இல்லையா!

ஜான்சிராணி லட்சுமி பாய், போர்க்களத்திற்குச் சென்றபோது, தன் குழந்தையை இப்படித்தான் முதுகில் கட்டிக்கொண்டு சண்டையிட்டார் எனக் குறிப்புகள் உள்ளன.
No comments:
Post a Comment