நேபாளம், மன்னராட்சி நடைபெறும் நாடு. ஆயினும் இப்போது மாவோயிஸ இயக்கத்தின் தொடர்ச்சியாக, அங்கு மக்களாட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் முகமாகவும் அரசுக்கு இதன் தீவிரத்தை உணர்த்தும் முகமாகவும் நேபாளத்தில் கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது.
முக்கிய சாலையோரங்களில் மேசை, நாற்காலிகள் இட்டு அதன் மீது மாபெரும் பதாகைகளை விரித்து, மக்களின் கையொப்பங்களைத் தொண்டர்கள் திரட்டி வருகிறார்கள்.
ஒலிபெருக்கியைக் கையில் வைத்துக்கொண்டு மக்களைக் கூவி அழைத்து, இது குறித்துத் தன்னார்வலர்கள் பேசுகிறார்கள். காத்மண்டுவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இந்தக் காட்சிகளளக் கண்டேன்.
இப்படியான ஒரு பதாகையில் நானும் என் அம்மா செளந்திரவல்லியும் கையொப்பம் இட்டு, இந்தக் கோரிக்கைக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்தோம்.
இங்கு நான் உள்ள படங்களை எடுத்தவர் என் அம்மா, நான் இல்லாத படங்களை எடுத்தவன் நானே.
மேலே உள்ள படத்தில் கையொப்பம் இடுபவர், என் அம்மா.
என் அம்மா நிற்கும் இந்த வீதி முனையில்தான் அந்தக் கையொப்ப இயக்கத்தினர் அமர்ந்திருந்தனர்.
Saturday, June 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment