Sunday, June 19, 2011

நான் கண்ட காசி

மே 2007இல் பெற்றோர், உறவினர்களுடன் காசிக்குச் சுற்றுலா சென்ற போது எடுத்த படங்கள்:

 கங்கையில் புனிதக் குளியல்

  கங்கையும் கரையும் 1

  கங்கையும் கரையும் 2

கொடி அணிவகுப்பு
விற்பனைக்குக் காத்திருக்கும் தயிரும் மண் கிண்ணங்களும்


 காசியின் குறுகிய சந்துகளில் திரியும் மாடுகளுள் ஒன்று.

கோமாதாவுக்கு பக்தியுடன் ஒரு வணக்கம்

தாயும் சேயும்
 கங்கையின் நீரலைகள்

  மாலை நேரத்து மயக்கம்

 படகில் செல்லும் ஒருவர், கங்கை நீரைப் புட்டியில் பிடிக்கிறார்

 ஒரு பிணம் எரிகிறது! காசியில் இறந்தால் மோட்சம்!

 காசி மாநகரத் துணிக் கடை ஒன்றின் பெயர்ப் பலகையில் தமிழ்

 தலைகீழ் தவம் செய்கிறது படகு

 அப்பப்பா! எவ்வளவு கொடிகள்!

 மே 2007இல் நான் காசிக்குச் சென்ற போது எடுத்த படங்கள் இவை.
படமும் எழுத்தும்: அண்ணாகண்ணன்



என் தந்தை குப்புசாமி

தந்தையர் தினத்தை முன்னிட்டு, என் தந்தை குப்புசாமி அவர்களின் சில படங்களை என் வலைப்பதிவுகளிலிருந்து திரட்டி வெளியிடுகிறேன்.

தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், இப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக உழைத்து, பலருக்கும் உதவி வருகிறார்.

இந்தத் தந்தையர் நாளில் அவரை வணங்குகிறேன்.

1978இல்

1996இல் என் முதல் நூல் வெளியீட்டு விழாவில்

2001இல் சென்னையில்
2007இல் ஒரிசாச் சுற்றுலா சென்ற போது, உறவினர்களுடன்.

2007இல் நேபாளச் சுற்றுலாவின்போது, பசுபதிநாதர் கோவில் வாசலில்

2007இல் ஒரிசாச் சுற்றுலா சென்ற போது, உறவினர்களுடன்.

புது கேமராவில் பிடித்த காட்சிகள்

ராணி வார இதழில் துணை ஆசிரியராக இருந்தபோது, சில நேரங்களில் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்கத் தனியாக ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, எனக்கு ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து விட்டால் நானே புகைப்படம் எடுத்துவிடலாம் என்று ஆசிரியர் அ.மா.சாமி நினைத்தார். அதற்காகப் புதிதாக ஒரு புகைப்படப் பதிவுக் கருவியை வாங்கினார்கள் (2001). அதில் முதல் முதலாகப் புகைப்படச் சுருள் ஒன்றை இட்டு, பயிற்சிக்காக ஒரு சுருள் (ரோல்) வரைக்கும் எனக்குப் பிடித்ததை எடுத்துப் புகைப்படக் கலை பழகச் சொன்னார்.

அதன் படி 2001 மார்ச் 18 அன்று புறப்பாடு ஆயிற்று. சுமார் 32 படங்களை எடுத்தேன். அவற்றுள் சில இங்கே:

அம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்தேன். அதிகாலையில் கதிரவன் உதயம்.

Photobucket - Video and Image Hosting

வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு வீட்டு வாசலில் இந்த நாய், உயிரே போவது போல் குரைத்துக்கொண்டிருந்தது. அதன் கண்கள் எப்படிப் பளபளக்கின்றன பார்த்தீர்களா?

Photobucket - Video and Image Hosting

புழல் ஏரியின் ஒரு முனை, எங்கள் வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மணல் கொள்ளையினாலோ என்னவோ அங்கு பல நேரங்களில் தண்ணீர் அதிகம் இருப்பதில்லை. நான் போன அன்று நூற்றுக்கணக்கான காகங்கள் அங்கு மாநாடு போட்டிருந்தன.

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


அப்போது என் வீட்டுக்கு வந்தேன்.

Photobucket - Video and Image Hosting

வாசலில் சுபா அக்காவின் பையன் அரவிந்த், விளையாடிக்கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஆட்டுக் குட்டி ஒன்றும் மேய்ந்தது. பையன், ஆட்டுடன் விளையாடுவது போல் படம் எடுக்கலாம் என்றால் ஆடு ஒத்துழைக்கவே இல்லை. பிறகு என் அம்மா ஆட்டைப் பிடித்துக்கொள்ள, ஒரு வழியாகப் படம் பிடித்தேன்.

Photobucket - Video and Image Hosting


சுபா அக்காவின் மகள் அபிநயா. இவள் பிறந்தபோது, அபிநயகுழலி என்ற புனைபெயரில் குட்டிக் கதை ஒன்று எழுதினேன்.

Photobucket - Video and Image Hosting


அபிநயாவும் அரவிந்தும்

Photobucket - Video and Image Hosting

அப்போது அங்கு இருந்த என் தம்பி (சித்தி மகன்) பாலாஜியுடன் அபிநயாவும் அரவிந்தும். அதிகாலை வெளிச்சத்தில் எடுத்தது.

Photobucket - Video and Image Hosting

மூத்த அக்கா மீராவின் மகள்கள் காயத்ரி, பிரீத்தி உடன் அபிநயா.

Photobucket - Video and Image Hosting

பிரீத்தி உடன் அபிநயா.

Photobucket - Video and Image Hosting


அம்மா செளந்திரவல்லி, மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்.

Photobucket - Video and Image Hosting

அப்பா குப்புசாமி, கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்திருந்தார்.

Photobucket - Video and Image Hosting

அக்கா சுபா என்ற வேதவல்லி அங்கு இருந்தார்கள்.

Photobucket - Video and Image Hosting

இரண்டே முக்கால் வயதில் என் பெற்றோருடன்


இது, 1978இல் என் இரண்டே முக்கால் வயதில் எடுத்தது. சென்னையில் உள்ள ஒரு புகைப்பட நிலையத்தில் இதை எடுத்துள்ளார்கள். 20 வயதிற்குள் என்னை அதிகப் புகைப்படங்கள் எடுக்கவில்லை. எடுத்த சிலவற்றையும் பத்திரமாக வைக்கவில்லை. அப்படிப் பார்க்கும்போது இந்தப் புகைப்படம்தான் இப்போதைக்கு என்னிடம் இருப்பதிலேயே சிறுவயதுப் புகைப்படம்.

இடமிருந்து வலமாக: பக்கத்து வீட்டுப் பையன் பாபு, அப்பா குப்புசாமி, அவர் கையில் என் தம்பி பிரசன்னா (10 மாதக் குழந்தை), அம்மா செளந்திரவல்லி, கீழே நிற்கும் பொடியன் நான். வேறு ஏதோ ஒன்றைத் தேடும்போது இந்தப் புகைப்படம் கிடைத்தது. படம் எடுக்கும் நேரத்தில் தலையை ஆட்டிவிட்டேனாம். அதனால் முகம் சரியாகத் தெரியவில்லை. இதைச் சரிசெய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. சரி என்று இன்னொரு படம் எடுத்திருக்கிறார்கள். அதில் நான் ஒழுங்காகத் தெரிந்துள்ளேன். தொப்பி போட்ட என் தம்பி தலையை ஆட்டியிருக்கிறான். அந்தப் படம், ஒரு சமயத்தில் எரிந்துவிட்டதாம். இனி மீட்க முடியாத அந்தக் காலத்தை இந்தப் படத்தின் மூலம்தான் வாழ முடியும்.

Monday, February 21, 2011

எனது இரண்டாம் குருதிக் கொடை

நண்பர் ஜனார்த்தன், அண்மையில் தொலைபேசியில் அழைத்தார். "என் நண்பரின் தந்தை டில்லி என்பவர் (வயது 60), சென்னை போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவருக்குக் குருதி தேவை. நான் அளித்துவிட்டேன். நீங்கள் விரும்பினால், அவருக்குக் குருதிக் கொடை வழங்கலாம்" என்றார்.
நாங்கள் முன்பு 13.7.2006 அன்று, அடுத்தடுத்து, குருதிக் கொடை அளித்தோம். அது தொடர்பான இடுகை இங்கே.
இப்போதும் உடனே ஒப்புக்கொண்டேன். 2011 பிப்ரவரி 21 அன்று மாலையில் அந்த மருத்துவமனையில் உள்ள குருதி வங்கிக்குச் சென்றேன். வழக்கமான கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தை அளித்து நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொடுத்தேன்.
என் கால்களில் நீல நிற உறையை அணிந்துகொள்ளச் சொன்னார்கள். குருதி எடுக்கும் அறையினுள் நுழைந்தேன்.
என்னைச் சாய்ந்து படுக்கவைத்து, என் கைகளைத் தேய்த்து, நரம்பினைக் கண்டுபிடித்து, அதில் ஓர் ஊசியைச் செருகினார்கள். என் கையில் மஞ்சள் பந்து ஒன்றை அளித்து, அதை அழுத்துமாறு கூறினார்கள். அப்போது, குருதி வேகமாகப் பாயத் தொடங்கியது.
அந்த அறை முழுவதும் Message of Love; Donate blood என்பது உள்பட, குருதிக் கொடையை வலியுறுத்தும் பல்வேறு வாசகங்கள் இருந்தன.
20 மணித் துளிகளில் என்னிடமிருந்து ஒரு யூனிட் (450 மி்ல்லி) குருதி, அவர்களின் குருதிப் பைக்குள் சேர்ந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தக் குருதி, மீண்டும் உடலுள் ஊறிவிடும் என்றார்கள்.
என் அருகில் இன்னொருவரும் குருதிக் கொடை அளித்தார். இந்தப் புகைப்படங்களை எடுத்தவர், அவரே. இவற்றைப் பிறர் பார்வைக்கு அளிப்பது, குருதிக் கொடையை ஊக்குவிக்கவே.
குருதி எடுத்து முடிந்ததும், பழச்சாறும் பிஸ்கட் பொட்டலமும் தந்து உட்கொள்ளச் சொன்னார்கள்.
அடுத்து, நான்காவது மாடிக்குச் சென்றேன். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் டில்லியைப் பார்க்க முடியாது என்றார்கள். அவர் மனைவி சரஸ்வதியைச் சந்தித்தேன். அவர், விபத்து நடந்த விதத்தை விளக்கினார்.
திருநின்றவூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகுளத்தூர் கிராமம். மூன்று வாரங்கள் முன்பு, ஒரு திங்கட்கிழமை. மாலை 7 மணி. அந்தக் கீற்றுக் கொட்டகை, சாலையோரம் இருந்தது, . அதில் விவசாயி டில்லி, நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் ஒரு டிராக்டர் வந்தது. யார் குறுக்கே வந்தார்களோ, யாரும் எதிர்பாராத தருணத்தில், அந்த வாகனம், குடிசைக்குள் நுழைந்தது. அங்கு மூவர் இருந்தனர். டில்லியின் கால்களில் சக்கரங்கள் ஏறின. அவரின் நண்பருக்குக் கை எலும்புகள் முறிந்தன. மூன்றாமவர், குடிசைக்குப் பின்னால் போய் விழுந்தார். அவருக்குப் பெரிய காயங்கள் இல்லை.
டில்லியை இந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை தொடங்கியது. ஒரு காலை முட்டிக்குக் கீழாக வெட்டி எடுத்தார்கள். அடுத்து, தொடையிலும் ஓர் அறுவை நிகழ்த்த வேண்டியுள்ளது. இதற்கு 12 யூனிட் குருதி தேவை.
என் குருதி, ஓ பாசிட்டிவ் வகையைச் சேர்ந்தது. டில்லிக்கோ வேறு பிரிவு (ஏ நெகட்டிவ் என நினைக்கிறேன்). ஆயினும் யாரேனும் வேறு குருதி வகையைக் கொடுத்தால், குருதி வங்கியினர், அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்குத் தேவையான குருதியைத் தந்துவிடுவார்கள்.
இவ்வாறு சரஸ்வதி கூறினார்.
கை முறிந்த இன்னொருவரின் மகன் சதீஷ், அங்கிருந்தார். அவர் மேலும் சில விளக்கங்களைக் கூறினார்.
"இவ்வாறு வேறு பிரிவிலாவது குருதி கிடைக்காவிட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அவரது குருதிப் பிரிவை அளிக்க, அதிகக் கட்டணம் வசூலிப்பார்கள். அதைத் தவிர்க்க, உரியவர்கள், தம் உறவினர்கள், நண்பர்கள் என எவரையேனும் குருதிக் கொடை அளிக்கத் தூண்டுவார்கள். இந்த வகையிலாவது, குருதிக் கொடை வளரும் என்பதாலேயே  இவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்" என்றார் சதீஷ்.
டில்லியின் மகன் மணி, தொலைபேசியில் எனக்கு நன்றி தெரிவித்தார். "எங்கள் கிராமத்துக்கு வாருங்கள்" எனச் சதீஷ் அழைத்தார்.  அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கூறி, விடைபெற்றேன்.
எவருக்கேனும் ஓ பாசிட்டிவ் குருதி தேவைப்பட்டால் என்னை அணுகலாம்.

Friday, February 18, 2011

கேணி நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி

13.02.2011 அன்று சென்னை க.க.நகரில் ஞாநியும் பாஸ்கர் சக்தியும் இணைந்து நடத்தும் கேணிக் கூட்டத்தில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பேசினார். வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இதில் நான் பார்வையாளனாகப் பங்கேற்றேன். இந்த நிகழ்வு தொடர்பாக 18.02.2011 அன்றைய தினமலர் நாளிதழில் ஒரு சிறு கட்டுரை வெளியாகியுள்ளது.

உங்கள் கண்களுக்கு ஒரு பயிற்சி. அதில் என் புகைப்படமும் உள்ளது. முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
நன்றி - தினமலர்