மே 2, 3, 4 தேதிகளில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவைச் சுற்றியுள்ள இடங்களில் பெற்றோருடன் சுற்றுலா சென்று திரும்பினேன். அங்கு பசுபதிநாதர் கோயிலைச் சுற்றிப் பார்த்தேன். கோயில் வளாகத்தினுள் பல காட்சிகள் கண்ணைக் கவர்ந்தன. அவற்றுள் சிலவற்றை இங்கே காணுங்கள்.
நான் இருக்கும் படங்களை எடுத்தவர், என் அப்பா குப்புசாமி. நான் இல்லாத படங்களை எடுத்தவன் நானே.
'அதென்ன வெங்கலக்கிண்ணம் கிண்ணமா கம்பி வேலி!' - அவை அரை வட்டமாய் அமைந்துள்ள நீள்வரிசை விளக்குகள். விழாக் காலங்களில் விளக்கேற்றுவார்கள் என நினைக்கிறேன். அவை அனைத்தில் தீபம் சுடரும் காட்சியைக் கற்பனை செய்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது, இல்லையா!
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர்.
இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.
2 comments:
ஹைய்யோ............ சூப்பர் படங்கள் & சூப்பர் இடங்கள்.
அதென்ன வெங்கலக்கிண்ணம் கிண்ணமா கம்பி வேலி!
அதி சூப்பர் ( TG TM) ன்னு சொல்லி சொல்லியே போரடிக்குது.
இதுக்கு மாற்றுச் சொல் உடனடி தேவை:-)

Post a Comment