புகழ்மிகு இதழாளரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நேர்கண்டவருமான அனிதா பிரதாப்பை 10.12.2009 அன்று சென்னையில் சந்தித்தேன்.
ஜப்பானில் வசிக்கும் இவர், தற்போது சுதந்திரமான இதழாளராக எழுதி வருகிறார்.
மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் அவரை நேர்காண அனிதா பிரதாப் வந்திருந்தார். அவருடன் பழ.நெடுமாறனின் மகள் உமாவும் வந்திருந்தார்.
சச்சி அவர்களின் நண்பர் என்ற முறையில் நான் உடன் இருந்தேன்.
நேர்காணல் முடிந்த பிறகு, நாங்கள் நால்வரும் அருகில் இருந்த அசோகா உணவு விடுதியில் மதிய உணவு உண்டோம். இந்தச் சந்திப்பு, சிறப்பாக அமைந்தது.
Thursday, December 10, 2009
அனிதா பிரதாப்பைச் சந்தித்தேன்
Thursday, November 19, 2009
தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு - 10 படங்கள்
தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் மறுவாழ்வுக்காக ரூ.100 கோடி ஒதுக்கி 12.11.2009 அன்று அறிவித்தார். இந்த நற்பணிக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு மறவன்புலவு க.சச்சிதானந்தனும் நானும் 13.11.2009 அன்று காலை, முதல்வரின் இல்லத்திற்குச் சென்றோம்.
அந்தச் சந்திப்பு தொடர்பான பதிவு:
தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு
இந்தச் சந்திப்பின் போது தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது எடுத்த 10 படங்கள் இங்கே:










படங்களுக்கு நன்றி: தமிழக அரசின் செய்தித் துறை
அந்தச் சந்திப்பு தொடர்பான பதிவு:
தமிழக முதல்வருடன் ஒரு சந்திப்பு
இந்தச் சந்திப்பின் போது தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது எடுத்த 10 படங்கள் இங்கே:










படங்களுக்கு நன்றி: தமிழக அரசின் செய்தித் துறை
Monday, November 16, 2009
அண்ணாகண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னை ஆன்லைன் அலுவலக மொட்டை மாடியில், சென்னை ஆன்லைன் ஊழியர்களுடன் என் பிறந்த நாளைக் கொண்டாடினேன். 16.11.2009 அன்று மாலையில் 'கேக்' வெட்டினேன். 'கேக்' வெட்டுவதன் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இதைத் தான் எளிதில், உடனே ஏற்பாடு செய்ய முடிந்தது என்பதால், ஏற்றுக்கொண்டேன். என் வேண்டுகோளை ஏற்று, முகத்தில் 'கேக்' தடவாமல், அனைவரும் சமர்த்தாக ஒத்துழைத்ததில் மகிழ்ச்சி. அந்தக் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில படங்கள் இங்கே.

சென்னை ஆன்லைன் நிறுவனரும் தலைவருமான இல.இரவிச்சந்திரன் உள்பட அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.












அன்பர்கள், என் பிறந்த நாளை (16.11.2009) உலக வளர்ச்சி நாளாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உலகம் நன்முறையில் வளர எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே.
'மின் தமிழ்' குழுமத்தில் என்னை வாழ்த்திய இரு இழைகள்:
Anna Kannan's Birthday today
அண்ணாகண்ணன் பிறந்த நாள்
'தமிழமுதம்' குழுமத்தில் என்னை வாழ்த்திய இழை:
அண்ணாகண்ணன் பிறந்த நாள்
அமெரிக்காவிலிருந்து கார்கில் ஜெய் அனுப்பிய வாழ்த்து அட்டை இதோ:
மனம் நிறைய வாழ்த்திய அன்பு உள்ளங்களை வணங்குகிறேன். உங்கள் நினைவில் நான் நீடிப்பதில் மகிழ்ச்சி. இந்த நட்பு, இணையம் தந்த கொடை. நேரிலும் தொலைபேசியிலும் இணையம் மூலமாகவும் வாழ்த்திய உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நன்றிகள்.
படங்களுக்கு நன்றி: செந்தில் & பாட்சா
உதவி: நடராஜன், லெட்சுமணன்.
Subscribe to:
Posts (Atom)