Sunday, June 19, 2011

இரண்டே முக்கால் வயதில் என் பெற்றோருடன்


இது, 1978இல் என் இரண்டே முக்கால் வயதில் எடுத்தது. சென்னையில் உள்ள ஒரு புகைப்பட நிலையத்தில் இதை எடுத்துள்ளார்கள். 20 வயதிற்குள் என்னை அதிகப் புகைப்படங்கள் எடுக்கவில்லை. எடுத்த சிலவற்றையும் பத்திரமாக வைக்கவில்லை. அப்படிப் பார்க்கும்போது இந்தப் புகைப்படம்தான் இப்போதைக்கு என்னிடம் இருப்பதிலேயே சிறுவயதுப் புகைப்படம்.

இடமிருந்து வலமாக: பக்கத்து வீட்டுப் பையன் பாபு, அப்பா குப்புசாமி, அவர் கையில் என் தம்பி பிரசன்னா (10 மாதக் குழந்தை), அம்மா செளந்திரவல்லி, கீழே நிற்கும் பொடியன் நான். வேறு ஏதோ ஒன்றைத் தேடும்போது இந்தப் புகைப்படம் கிடைத்தது. படம் எடுக்கும் நேரத்தில் தலையை ஆட்டிவிட்டேனாம். அதனால் முகம் சரியாகத் தெரியவில்லை. இதைச் சரிசெய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. சரி என்று இன்னொரு படம் எடுத்திருக்கிறார்கள். அதில் நான் ஒழுங்காகத் தெரிந்துள்ளேன். தொப்பி போட்ட என் தம்பி தலையை ஆட்டியிருக்கிறான். அந்தப் படம், ஒரு சமயத்தில் எரிந்துவிட்டதாம். இனி மீட்க முடியாத அந்தக் காலத்தை இந்தப் படத்தின் மூலம்தான் வாழ முடியும்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

படம் ஒரு பொக்கிஷம்.

Sumitran said...

What is the 'pakkathu veetu payyan' doing in your family photo, Anna ?!?

முனைவர் அண்ணாகண்ணன் said...

It's not a perfect family photo; my elder sisters are not in this pic.

I just asked my mom. she said, 'when they started to go out, this neighbor boy also accompanied. When dad decided to go for a photo, he also got a place'.

It's a casual thing, friendly neighbors getting in our photos & our children getting in their photos.