Sunday, June 19, 2011

புது கேமராவில் பிடித்த காட்சிகள்

ராணி வார இதழில் துணை ஆசிரியராக இருந்தபோது, சில நேரங்களில் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்கத் தனியாக ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, எனக்கு ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து விட்டால் நானே புகைப்படம் எடுத்துவிடலாம் என்று ஆசிரியர் அ.மா.சாமி நினைத்தார். அதற்காகப் புதிதாக ஒரு புகைப்படப் பதிவுக் கருவியை வாங்கினார்கள் (2001). அதில் முதல் முதலாகப் புகைப்படச் சுருள் ஒன்றை இட்டு, பயிற்சிக்காக ஒரு சுருள் (ரோல்) வரைக்கும் எனக்குப் பிடித்ததை எடுத்துப் புகைப்படக் கலை பழகச் சொன்னார்.

அதன் படி 2001 மார்ச் 18 அன்று புறப்பாடு ஆயிற்று. சுமார் 32 படங்களை எடுத்தேன். அவற்றுள் சில இங்கே:

அம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்தேன். அதிகாலையில் கதிரவன் உதயம்.

Photobucket - Video and Image Hosting

வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு வீட்டு வாசலில் இந்த நாய், உயிரே போவது போல் குரைத்துக்கொண்டிருந்தது. அதன் கண்கள் எப்படிப் பளபளக்கின்றன பார்த்தீர்களா?

Photobucket - Video and Image Hosting

புழல் ஏரியின் ஒரு முனை, எங்கள் வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மணல் கொள்ளையினாலோ என்னவோ அங்கு பல நேரங்களில் தண்ணீர் அதிகம் இருப்பதில்லை. நான் போன அன்று நூற்றுக்கணக்கான காகங்கள் அங்கு மாநாடு போட்டிருந்தன.

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


அப்போது என் வீட்டுக்கு வந்தேன்.

Photobucket - Video and Image Hosting

வாசலில் சுபா அக்காவின் பையன் அரவிந்த், விளையாடிக்கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஆட்டுக் குட்டி ஒன்றும் மேய்ந்தது. பையன், ஆட்டுடன் விளையாடுவது போல் படம் எடுக்கலாம் என்றால் ஆடு ஒத்துழைக்கவே இல்லை. பிறகு என் அம்மா ஆட்டைப் பிடித்துக்கொள்ள, ஒரு வழியாகப் படம் பிடித்தேன்.

Photobucket - Video and Image Hosting


சுபா அக்காவின் மகள் அபிநயா. இவள் பிறந்தபோது, அபிநயகுழலி என்ற புனைபெயரில் குட்டிக் கதை ஒன்று எழுதினேன்.

Photobucket - Video and Image Hosting


அபிநயாவும் அரவிந்தும்

Photobucket - Video and Image Hosting

அப்போது அங்கு இருந்த என் தம்பி (சித்தி மகன்) பாலாஜியுடன் அபிநயாவும் அரவிந்தும். அதிகாலை வெளிச்சத்தில் எடுத்தது.

Photobucket - Video and Image Hosting

மூத்த அக்கா மீராவின் மகள்கள் காயத்ரி, பிரீத்தி உடன் அபிநயா.

Photobucket - Video and Image Hosting

பிரீத்தி உடன் அபிநயா.

Photobucket - Video and Image Hosting


அம்மா செளந்திரவல்லி, மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்.

Photobucket - Video and Image Hosting

அப்பா குப்புசாமி, கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்திருந்தார்.

Photobucket - Video and Image Hosting

அக்கா சுபா என்ற வேதவல்லி அங்கு இருந்தார்கள்.

Photobucket - Video and Image Hosting

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கண்ணா!
படங்கள் மிக நேர்த்தி; அபிநயாவின் சிரித்தமுகம் இயற்கையாக உள்ளது. வீட்டார் எதுவித ஆர்ப்பாட்டமுமில்லாமல்; இயல்பாக இருப்பது; படத்துக்கு தனி அழகைத் தருகிறது. உங்களிடம் தனி இரசனை உண்டு.
யோகன் பாரிஸ்

aaradhana said...

படங்கள் சூப்பர் சார். உங்கள் எழுத்தும் தான்.. மிகவும் இயற்கை