Saturday, December 22, 2007
சொக்கப் பனை எரிகிறது
17.11.2007 அன்று, கார்த்திகை முதல் தேதி. நாகை மாவட்டத்தில் கடலோரம் அமைந்துள்ள பெருந்தோட்டம் பஞ்சாயத்தில் நாயக்கர்குப்பம் அருகில் இருந்தேன். இரவு 7 மணி இருக்கும். நல்ல குளிர்க் காற்று. என் உடல் சிறிது வெடவெடத்தது. நாசியில் நீர் சுரந்தது. என் உடன் வந்த நண்பர், தலைக்கு மப்ளர் கட்டிக்கொண்டார். அப்போது, தற்செயலாக அங்கு சாலையோரமாகச் சொக்கப் பனை கொளுத்தும் காட்சியைக் கண்டேன்.
சொக்கப் பனை என்பது, வீதியில் ஓலைகள், சுள்ளிகள்.... போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு கோபுரம் போல் அமைத்து, ஊர் மக்கள் கூடியிருக்க, கொளுத்தும் ஒரு நிகழ்வாகும். குளிருக்கு இதமாக இருப்பதோடு, பழைய பொருட்களை இதில் எறிந்து எரிப்பதும் உண்டு. அந்த வகையில் போகியோடு ஒப்பிடக்கூடிய ஒரு நிகழ்வு, இது.
விறுவிறுவெனப் பற்றிய தீ, கொழுந்து விட்டு எரிந்து சற்று நேரத்தில் அணைந்தது. தீ ஏற ஏற, சூடும் வெளிச்சமும் ஒரே நேரத்தில் ஏறின. தீப்பொறிகள் காற்றில் விசிறிப் பறந்தன. மக்கள் சற்றே விலகி நின்று அதை அனுபவித்தார்கள்.
இந்த அழகை நிலாவும் வேடிக்கை பார்த்தது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அவ்வளவு தூரம் போனீர்களே,நாகை உள்ளேயே நடக்கும் அதையும் போட்டிருக்கலாம்.
என்ன? இருட்டில் பனை ஓலை/நெருப்பு எல்லாம் ஒன்றாகத்தான் தெரியும். :-)
தளபதி படத்துல வர்ற ராக்கம்மா பாட்டு செட்டிங் மாதிரி இருக்கு!!
Post a Comment