Saturday, January 05, 2008

ஜதி பல்லக்கில் பாரதி

மகாகவி பாரதி உயிரோடு இருந்தபோது அவருக்கு உரிய மரியாதை செலுத்தத் தமிழ்ச் சமூகம் தவறிவிட்டது. அந்தக் குறையை இப்போதாவது நிவர்த்தி செய்வோம் என்ற எண்ணத்துடன் ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளில் அவரது உருவச் சிலையை ஜதி பல்லக்கில் வைத்து, பாரதி பாடல்கள் பாடியபடி, ஊர்வலமாகத் தூக்கிச் சென்று பாரதி அன்பர்கள் விழாக் கொண்டாடி வருகின்றனர். வழக்கறிஞர் ரவி குழுவினர் நிருவகிக்கும் வானவில் பண்பாட்டு மையம், இந்த நிகழ்வை நடத்துகிறது. அதே போன்று 2007 டிசம்பர் 11 அன்றும் விழாக் கொண்டாடினர்.

இந்த ஜதி பல்லக்கினைத்தான் அவர்கள் தூக்கிச் சென்றனர்.



திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதைகள்...



இந்த விழாவில் கவிஞர் மயனுக்குப் பாரதி விருதினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழங்கினார். (இடமிருந்து வலமாக) ஒய் எம் சி ஏ பட்டிமன்றத்தை நீண்ட காலமாக நடத்தி வரும் கெ.பக்தவத்சலம், வழக்கறிஞர் ரவி, முனைவர் வ.வே.சு., கவிஞர் மயன், கவிஞர் ஈரோடு தமிழன்பன்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பகுதியினர்.



படங்கள்: அண்ணாகண்ணன்

No comments: