Sunday, September 28, 2008
ஆலம்பரைக் கோட்டை
கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆலம்பரை, பண்டைய நாளில் ஒரு துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் இப்பகுதி, இடைக்கழிநாடு எனப் பயர் பெற்றிருந்ததாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டில் முகமதியர்களால் ஆலம்பரையில் கோட்டை கட்டப்பட்டது.
செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட சதுர வடிவிலான கண்காணிப்பு நிலை மாடங்களுடன் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. நவாபுகளின் ஆட்சியில் ஆலம்பரை, துறைமுகப் பட்டினமாக இருந்துள்ளது.
இக்கோட்டையின் கீழ்ப்புறம், படகுத் துறை ஒன்று, கப்பலுக்குப் பொருட்களை ஏற்ற, இறக்க அமைக்கப்பட்டுள்ளது. படகுத் துறையின் நீளம் சுமார் 100 மீட்டர். அவற்றின் பகுதிகள் இப்போதும் காணப்படுகின்றன.
ஆலம்பரை படகுத் துறையிலிருந்து சரிகைத் துணி வகைகள், உப்பு, நெய் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஆலம்பரையில் அமைந்துள்ள நாணயச் சாலையில் ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.
இந்நாணயச் சாலையின் பொறுப்பாளராக இருந்த பொட்டிபத்தன், கிழக்குக் கடற்கரை வழியாகக் காசி, இராமேஸ்வரத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்காகச் சிவன் கோயில், பெரிய குளம், சத்திரம் ஆகியவற்றைக் கட்டினார்.
இந்தப் பெருவழி, இப்போது கோட்டைக்கு மேற்கில் 2 மைல் தொலைவில் செல்கிறது. இந்தப் பகுதியைத் தமிழ்நாடு தொல்லியல் துறை இப்போது பராமரித்து வருகிறது.
கி.பி.1735இல் நவாப் தோஸ்த் அலிகான் இக்கோட்டையை ஆண்டார். கி.பி.1750இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சுத் தளபதி டியுப்ளக்சுக்கு, சுபேதார் முசாபர்ஜங் இந்தக் கோட்டையைப் பரிசளித்தார்.
கி.பி.1760இல் பிரெஞ்சுப் படையை வெற்றி கொண்ட ஆங்கிலேயப் படை, இக்கோட்டையைக் கைப்பற்றிச் சிறிதளவு சிதைத்துவிட்டது. சிதைவுகளின் மிச்ச சொச்சம், இன்றும் நம் முன் காட்சி அளிக்கின்றன.
9.9.2007 அன்று முகவை முனியாண்டியின் ஏற்பாட்டில் நண்பர்களுடன் இப்பகுதிக்குச் சென்ற போது நான் எடுத்த படங்களின் ஒரு பகுதி இவை.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சமீப கால தமிழ் திரைப்படங்களில் இந்த இடத்தை பார்த்திருக்கலாம்
வின்னர்,தனுஷ் இன் திருவிளையாடல்,இன்னும் நிறைய படங்கள்
Nalla pugaipadangal, yaarukkum paravalaga theriyatha ithai pondra mukkiyamana idangalai pugaipadam eduththu virivaga eluthiyirupathu arumai.
wow
www.tamil.com.nu
www.yarl.wordpress.com
இந்த மாதிரியான வெளி உலகத்திற்கு தெரியாத அரிதான இடங்களை புகை படம் எடுத்து கண்பித்ததற்கு மிகவும் நன்றி. இந்த ஆலம்பறை எங்கு உள்ளது, எப்படி போக வேண்டும் என்று தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.
இந்த மாதிரியான வெளி உலகத்திற்கு தெரியாத அரிதான இடங்களை புகை படம் எடுத்து கண்பித்ததற்கு மிகவும் நன்றி. இந்த ஆலம்பறை எங்கு உள்ளது, எப்படி போக வேண்டும் என்று தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும்.
Post a Comment