
சென்னை ஆன்லைன் அலுவலக மொட்டை மாடியில், சென்னை ஆன்லைன் ஊழியர்களுடன் என் பிறந்த நாளைக் கொண்டாடினேன். 16.11.2009 அன்று மாலையில் 'கேக்' வெட்டினேன். 'கேக்' வெட்டுவதன் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இதைத் தான் எளிதில், உடனே ஏற்பாடு செய்ய முடிந்தது என்பதால், ஏற்றுக்கொண்டேன். என் வேண்டுகோளை ஏற்று, முகத்தில் 'கேக்' தடவாமல், அனைவரும் சமர்த்தாக ஒத்துழைத்ததில் மகிழ்ச்சி. அந்தக் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில படங்கள் இங்கே.

சென்னை ஆன்லைன் நிறுவனரும் தலைவருமான இல.இரவிச்சந்திரன் உள்பட அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.












அன்பர்கள், என் பிறந்த நாளை (16.11.2009) உலக வளர்ச்சி நாளாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உலகம் நன்முறையில் வளர எது செய்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சியே.
'மின் தமிழ்' குழுமத்தில் என்னை வாழ்த்திய இரு இழைகள்:
Anna Kannan's Birthday today
அண்ணாகண்ணன் பிறந்த நாள்
'தமிழமுதம்' குழுமத்தில் என்னை வாழ்த்திய இழை:
அண்ணாகண்ணன் பிறந்த நாள்
அமெரிக்காவிலிருந்து கார்கில் ஜெய் அனுப்பிய வாழ்த்து அட்டை இதோ:
மனம் நிறைய வாழ்த்திய அன்பு உள்ளங்களை வணங்குகிறேன். உங்கள் நினைவில் நான் நீடிப்பதில் மகிழ்ச்சி. இந்த நட்பு, இணையம் தந்த கொடை. நேரிலும் தொலைபேசியிலும் இணையம் மூலமாகவும் வாழ்த்திய உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நன்றிகள்.
படங்களுக்கு நன்றி: செந்தில் & பாட்சா
உதவி: நடராஜன், லெட்சுமணன்.
3 comments:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாகண்ணன். நேரிடையாக தங்களைத் தெரியாது, ஆனால் மின் தமிழ் மூலமாகவும், நண்வர் விஜயின் (poetryinstone) மூலமாகவும் தங்களை அறிவேன்.
கேக் வெட்டி கேக்காமலே நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அண்ணா கண்ணன் அவர்களுக்கு
ஆசீர்வாதங்கள்
இன்னும் நூறு வருடம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடடுங்கள்
உங்கள் இல்லறத்துணையோடும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
Belated happy birthday....
Post a Comment