Thursday, December 10, 2009

அனிதா பிரதாப்பைச் சந்தித்தேன்


புகழ்மிகு இதழாளரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நேர்கண்டவருமான அனிதா பிரதாப்பை 10.12.2009 அன்று சென்னையில் சந்தித்தேன்.

ஜப்பானில் வசிக்கும் இவர், தற்போது சுதந்திரமான இதழாளராக எழுதி வருகிறார்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் அவரை நேர்காண அனிதா பிரதாப் வந்திருந்தார். அவருடன் பழ.நெடுமாறனின் மகள் உமாவும் வந்திருந்தார்.

சச்சி அவர்களின் நண்பர் என்ற முறையில் நான் உடன் இருந்தேன்.
















































நேர்காணல் முடிந்த பிறகு, நாங்கள் நால்வரும் அருகில் இருந்த அசோகா உணவு விடுதியில் மதிய உணவு உண்டோம். இந்தச் சந்திப்பு, சிறப்பாக அமைந்தது.

5 comments:

செல்வமுரளி said...

மிக்க மகிழ்ச்சி.....

kargil Jay said...

well. what did you talk ?

kargil Jay said...

the photos are so good too.

முனைவர் அண்ணாகண்ணன் said...

"பிரபாகரன் இறந்ததை நம்புகிறீர்களா?" என அனிதாவைக் கேட்டேன். "இலங்கை ராணுவம் காட்டிய உடல், பிரபாகரனின் உடல் இல்லை; ஆனால், வேறு வகையில் அவர் இறந்திருப்பார்; அவர் உடல் கிடைத்திருக்காது என்றே கருதுகிறேன்" என்றார் அவர்.

"விடுதலைப்புலிகளின் பின்னடைவை எதிர்பார்த்தீர்களா?" எனக் கேட்டேன். "பின்னடைவுக்கு ஒரு மாதம் முன்கூட, அடுத்த 20 ஆண்டுகளுக்குப் போராடும் வலுவுடன் உள்ளோம் எனப் பிரபாகரன் கூறியிருந்தார். எனவே இந்தத் திடீர் பின்னடைவை எதிர்பார்க்கவில்லை" என்றார் அவர்.

Aaron Thomae said...

Please read my blog and let me know what you think!

http://bestvacationdestinations.blogspot.com/