அண்ணாகண்ணன் வெளி என்ற வலைப்பதிவில் 97 பதிவுகளும் அண்ணாகண்ணன் கவிதைகள் என்ற பதிவில் 60 பதிவுகளும் அண்ணாகண்ணன் நேர்காணல்கள் என்ற வலைப்பதிவில் 22 பதிவுகளும் அண்ணாகண்ணன் கட்டுரைகள் என்ற வலைப்பதிவில் 65 பதிவுகளும் பதிந்துள்ளேன். ஒட்டுமொத்தமாக, சுமார் 400 பதிவுகளைப் பதிந்திருந்தாலும் அண்ணாகண்ணன் புகைப்படங்கள் என்ற இந்த வலைப்பதிவில் மட்டும் இந்தப் பதிவின் மூலம் சதம் அடித்துள்ளேன்.
முதலில், அச்சிட்ட படங்களை ஒளி உணரி (Scan) மூலம் கணினிக்குக் கொண்டு வந்து பதிவிட்டேன். பிறகு, புகைப்படக் கருவியுடன் கூடிய செல்பேசி வாங்கிய பிறகு அந்தப் படங்களைக் கொண்டு பதிவிட்டேன். அதன் தகவல் தடம் (Data cable) வேலை செய்யாததால், எடுத்த படங்களை உள்ளிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் வட இந்திய - நேபாளச் சுற்றுலாவுக்குச் செல்லும் முன் எணினி புகைப்படக் கருவி (Digital Camera) ஒன்றினை வாங்கினேன். அதைக் கொண்டு நிறைய படங்கள் எடுக்க முடிகிறது; சிறப்பாகவும் அமைகிறது.
இந்த நூறாவது பதிவில், ஒரிசாவின் கோனாரக் சூரிய கோயிலில் நான் எடுத்த படங்கள் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.











என் அம்மா சவுந்திரவல்லியும் அத்தை ஜானகியும்



நான் இருக்கும் படங்களை மட்டும் என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார்.
3 comments:
கண்ணன்,
நூறாவது பதிவுக்கு உங்களுக்கும், தங்கள் தாயாருக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகளில் உள்ள அழகு படங்களுக்காக அவ்வப்போது பார்க்கிறேன்.
அ.க,
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அன்புள்ள கண்ணன்
உங்களுடைய இந்த வித்தை பற்றி எனக்குத் தெரியாது. இன்றுதான் கண்டேன்.
மிகவும் அற்புதம்.
வடக்கு வாசல் அட்டைப் படத்துக்கு படங்களை அனுப்புங்கள்.
.
அன்புடன்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
Post a Comment