Saturday, March 01, 2008

கண்ணாடிப் பெட்டிக்குள் சுஜாதா

கணையாழியில் கடைசிப் பக்கம் எழுதிய சுஜாதாவின் கடைசித் தோற்றம் இது. 

27.2.2008 அன்று இரவு சுஜாதா மறைந்தார் என்ற செய்தி கிட்டியது. அடுத்த நாள் காலை அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் உடல் அங்கு இல்லை. அமெரிக்காவில் இருக்கும் மகன் வர வேண்டும் என்பதற்காக உடலை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதாகவும் 29.2.2008 அன்று காலையில் தான் உடலைக் கொண்டு வருவார்கள் என்றும் தெரிவித்தார்கள். இரா. முருகன், வைத்தீஸ்வரன், திருப்பூர் கிருஷ்ணன், தேசிகன்.... எனப் பலரும் அங்கு இருந்தார்கள். அடுத்த நாள் (29.2.2008) காலை மீண்டும் அங்குச் சென்றேன். முந்தைய நாளை விடக் கூட்டம் அதிகம் இருந்தது. காக்கித் தலைகள் நிறையத் தெரிந்தன. சுஜாதா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் நீங்காத் துயில் கொண்டிருந்தார். மவுன அஞ்சலி செலுத்தினேன். இலக்கிய, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அங்கு இருந்தார்கள். இனிப் பார்க்க முடியாத அவரைப் படத்திலாவது பிடித்து வைப்போம் என்ற எண்ணத்தில் சில படங்கள் எடுத்தேன். 

 கண்ணாடிப் பெட்டிக்குள் சுஜாதா  



சுஜாதா ரங்கராஜனின் மனைவி, உண்மையான சுஜாதா. 


சுஜாதாவின் மகன் ரங்கபிரசாத். அருகில் தேசிகன்.  


மலர் அஞ்சலி  






முடிந்தது

7 comments:

வல்லிசிம்ஹன் said...

படத்தைப் பார்த்ததும் ஐய்யோ அவர் கண் திறந்து பார்க்க மாட்டாரா என்று இருந்தது.

நன்றி கண்ணன்.

துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றி.

மனம் வருத்தமாக இருக்கிறது

manjoorraja said...

அவரது இறுதியான படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது உங்கள் மூலம்.

Ram said...

Thanks for the photos friend.

Ram

Ram said...

Thanks alot for the photos friend.

Thanks
Ram

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

உயர் திரு ரங்கராஜன் என்னும் சுஜாதா ஒருன் ஸ்ரீரங்கத்துக்காரர் என்பதில் எனக்கு ஒரு த்மார்த்தமான சந்தோஷம் உண்டு,
அவர் ஒரு எழுத்து ஓவியர்,கற்பனைத் தூரிகை கொண்டு எழுத்து நடைக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்த்தவர்,
அவர் அடி தொட்டு புதிய புதிய பரிமாணங்களை அடுத்து வரும் எழுத்தாளர்கள் கண்டு பிடிப்போம்,
அவர் எழுத்து நடை போலவே ,அவருடைய நடை ,உடை. பாவனை ,எல்லாவற்றிலும் ஒரு நளினம் இருக்கும், சிவாஜீ படப்பிடிப்பின் போது அவர் வந்தார் ,அவருக்கு கை கொடுத்து அவர் எழுத்துக்களுக்கு நன்றி சொன்னேன்
ஒரு மலர்ந்த புன்னகையுடன் என் கையை அழுத்தமாகப் பற்றி புன்னகைத்தார்,அது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது

அன்னாரது மறைவு ஈடு செய்ய முடியாதது,இன்னும் பல சுஜாதாக்கள்
உருவாவது மட்டுமே அன்னாரை மகிழச் செய்யும் முயற்சியாகும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Unknown said...

அவரது இறுதியான படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது உங்கள் மூலம். மிக்க நன்றி