படப் பதிவுக் கருவி கொண்ட செல்பேசியை வாங்கி 8 மாதங்கள் ஆனாலும் அதில் உள்ள படங்களைக் கணினிக்கு மடைமாற்றும் தகவல் வடத்தை நேற்றுதான் வாங்கினேன். இதுவரை இந்தப் புகைப்பட வலைப்பூவில் என்னைப் பிறர் எடுத்த படங்களையே உள்ளிட்டேன். முதல் முறையாக நான் எடுத்த படங்களை உள்ளிடுகிறேன்.
இந்தப் படங்களில் உள்ள குழந்தை, என் தம்பி பிரசன்னாவின் மகள் ஹர்ஷினி என்ற கஜா. துருதுருவென ஓடி விளையாடி, கத்தி, அழுது, குறும்பு செய்யும் குட்டி நிலா. அண்மையில்தான் முதல் பிறந்த நாளைக் கொண்டாடினாள். அவளின் சில காட்சிகள் இங்கே:
Sunday, May 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சார்,
குழந்தைகள் படத்தை பார்த்தாலே சந்தோசமாகிவிடுகிறது.
நம்ம வீடில் கூட ஒரு பெண் குழந்தை உள்ளது.
நன்றி.
குழந்தை அழகாக இருக்கின்றாள்.
நவரசத்திற்கு ஒன்று குறைவு.
(எட்டு புகைப்படம் இட்டுள்ளீர்கள்)
உடைக்கேற்றவாறு மாறும் உருவம். பிற்காலத்தில் கலைத்துறையில் வரலாம்.குழந்தைக்கு வாழ்த்துக்கள்!!.
Post a Comment