தண்ணீர்ப் பஞ்சம் வந்த பிறகு சென்னை மக்கள், நீருக்கு அதிக மதிப்பு அளிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு லிட்டர் பாலை விட ஒரு லிட்டர் தண்ணீர் விலை அதிகம் என்ற நிலையில், அந்தத் தண்ணீர் உள்ள இடங்களுக்கு இயல்பாகவே மதிப்பு ஏறியுள்ளது.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்றும் தண்ணீர் கொடுத்தால் புண்ணியம் என்றும் ஏற்கெனவே நம் மக்கள் கூறி வருகின்றனர். கோயில்களில் தலம், விருட்சம், தீர்த்தம் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. புனித நதிகள் பல நம்மிடம் உண்டு. அவற்றிலிருந்து நீரெடுத்துத் தலையில் தெளித்துக்கொள்வோர் பலர். இந்தப் பின்னணியில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்.
சென்னை, அம்பத்தூர், ஒரகடத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தடி கைவிசைக் குழாய்க்கு அங்குள்ள மக்கள், மஞ்சள், குங்குமம் வைத்து இறையம்சம் ஊட்டியிருக்கிறார்கள். வழக்கமாக அம்மன் கோயில்களில் உள்ள கல்லுக்கும் புற்றுக்கும் பொது இடங்களில் வேப்ப மரத்திற்கும் இந்தக் கெளரவம் உண்டு. இப்போது, கைக்குழாய்க்குக் கூட அந்த மரியாதை கிட்டியுள்ளது.
Sunday, June 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment