ஒரிசாவில் கோனாரக் சூரிய கோயிலிலிருந்து சில மணி நேரங்கள் பயண தூரத்தில் இந்தப் புத்தர் திருக்கோயில் உள்ளது. இதில் புதுமை என்னவென்றால், இந்தக் கோயிலை ஒட்டியவாறு பின்புறத்தில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது.
முதலில் புத்தர் ஆலயத்தைப் பாருங்கள்:
இந்தக் கோயிலின் முகப்பில் என் பெற்றோரும் அத்தையும் சித்தியும் நிற்கிறார்கள்
புத்தர் சிலை முன் நான்
புத்தர் கோயிலின் பின்புறத்தில் என் அப்பா
இப்போது சிவன் கோயிலைப் பாருங்கள்:
இது, பின்புறத் தோற்றம்
இது, முன்புறத் தோற்றம்
சிவன் கோயிலின் வாசலில் ஒருவர் கூவிக் கூவி பூக்களை விற்றுக்கொண்டிருந்தார்
இவற்றில் நான் இருக்கும் படங்களை மட்டும் என் அப்பா எடுத்தார். இதர படங்களை நான் எடுத்தேன். நாங்கள் இங்கு சென்றபோது உச்சி வெயில் கொளுத்தியது. கோயிலின் தரைப் பகுதியும் படிக்கட்டுகளும் பளிங்குக் கற்களில் அமைந்திருந்தன; அதனால் வெயிலில் தணலெனத் தகித்தன. ஓட்டமாய் ஓடிப் போய்ச் சுற்றிப் பார்த்துத் திரும்பினோம்.
Sunday, July 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
புத்தரின் ஆனந்த சயனமே...பிற்காலத்தில் அரங்க நாதனாக இந்துக்களால் மாற்றப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன்.
அரசமரத்தடி புத்தர் பிள்ளையார் ஆனதும் இதே போன்றுதான்.
அரங்கநாதனும் பிள்ளையாரும் புத்தர் காலத்திற்கு முந்தையவர்கள் அல்லவோ!
//அண்ணாகண்ணன் said...
அரங்கநாதனும் பிள்ளையாரும் புத்தர் காலத்திற்கு முந்தையவர்கள் அல்லவோ!
//
இருக்குவேதபடி,
சிவன் தெய்வமல்ல...வேதகாலத்தில் திருமால் பற்றியும், பிள்ளையார் பற்றியும் குறிப்புகள் கிடையாது. பிள்ளையார் துதி என்பது சங்ககாலப் பாடல்களின் ஆரம்பமாக இருந்ததில்லை.
இராமானுஜருக்கு பிறகு வைணவம் புகழ்பெற்றது. திருமால் வழிபாடு அன்றைய காலத்தில் தோன்றி வளர்ந்தது.
இங்கிருந்து கீழே தெரியும் பசுமையான பகுதியும், அதனருகே தெரியும் நீர் நிலை இருக்குமிடம் தான் அசோக சக்கரவர்த்தியின் மனமாற்றத்திற்கு காரணமான கலிங்கத்துப்போர் நடந்த இடமென்பது உங்களுக்கு தெரியுமா...
அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். அண்ணா
யாத்திரீகன்,
நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது. நாங்கள் மேலே நின்றிருந்தபோது, அந்த இடத்தைச் சுட்டி ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அங்கு ஆறு ஒன்றும் ஓடியதாக ஞாபகம். அதை எழுத மறந்துவிட்டேன். குறிப்பிட்டமைக்கு நன்றி.
கோவி, கண்ணன்,
புத்தர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கப் பாடல்களில் மாயோன் என குறிப்பிடப்படுகிறது. அது, திருமால் என்ற வாதத்தை முற்றிலுமாக மறுக்க முடியாது.
பிள்ளையார், வட புலத்திலிருந்து தென்புலத்திற்குத் தாமதமாக வந்தார் என்பது உறுதி. ஆனால், வட புலத்தில் கணேச வழிபாடு, நீண்ட காலமாக இருக்க வாய்ப்புண்டு.
ஆயினும், புத்தரையும் இந்தக் கடவுளரையும் கால நோக்கில் ஒப்பிட முயன்றது, நல்ல தொடக்கமே.
பதிவை முழுதாக பார்த்து விட்டு கலிங்கத்துப்போரையும் அசோகரைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். நல்ல வேளை யாத்ரீகன் வந்து சொல்லி விட்டு சென்றுள்ளார்.
அந்தி சாயும் ஒரு நேரத்தில் இந்த புத்தர் கோயில் மதில் சுவரில் அமர்ந்து அமைதியாய் ஓடும் அந்த நதியையும், சுற்றியுள்ள பச்சையையும் பார்த்தது இன்னும் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படங்களுக்கு நன்றி
அழகான படங்கள்!
வடபாணிச் சிவன் கோவில்..ஈழத்தவரான எங்களுக்குப் புதிது.
புத்தரின் ஆனந்த சயனத்தினுள் ஒரு தூக்குமம் உண்டு. அவர் வலக்கைப் பக்கம் ஒருக்களித்துப் துயில்வது
இருதயம் இலகுவாக இயங்கிச் , சுகமாத் துயில் கொள்ளவேனப் படித்தேன்.
அனுபவத்திலும் உண்மையே!!!
அருமையான படங்கள். பகிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணாகண்ணன் ஐயா.
hi
kannan god is only one Hindu People pray To Different Ways Tirumal and siva thers is same. But Your way is Different.
Congregation
By murugadoss
Post a Comment