ஒரிசாவின் புகழ்பெற்ற நந்தன்கனான் விலங்கியல் பூங்காவிற்கு, ஏப்ரல் 24 அன்று சென்றோம். அங்கு நுழைந்த உடன் வெள்ளை மயில்களைக் கண்டோம். கம்பிகளுக்குள் உலவியபடி அவை காதல் மொழி பேசி, முத்தமிட்டும் கொண்டன.
முன்னால் இருந்த கம்பி வலை, பின்னால் உள்ளதைத் தடுக்கிறது; படம் எடுக்கும்போதே கவனித்தேன். ஆனால், என் படக் கருவி, வளையின் துளைக்குள் செல்லும் அளவு சிறிதாக இல்லை.
அடுத்து, இந்த இரண்டு மயில்களும் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தன. நான் எடுக்கும் நொடியில் அவை தலையைத் திருப்பிக்கொண்டு விடுகின்றன.
அசையாக் காட்சியைவிட அசையும் காட்சியை எடுப்பது, பெரிய சவாலாய் உள்ளது.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர்.
இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.
4 comments:
சரியா போகஸ் பன்ணலியே?
அவசர க்ளிக்கோ?
இங்கு ஒரு செல்லப்பிராணி விற்பனை நிலையத்தில் கண்டுள்ளேன்.
இவற்றை அழிவில் இருந்து காப்போம்.
அழகான படம். மயிலின் அழகு சொல்லவா வேண்டும்.
சர்வேசன்,
முன்னால் இருந்த கம்பி வலை, பின்னால் உள்ளதைத் தடுக்கிறது; படம் எடுக்கும்போதே கவனித்தேன். ஆனால், என் படக் கருவி, வளையின் துளைக்குள் செல்லும் அளவு சிறிதாக இல்லை.
அடுத்து, இந்த இரண்டு மயில்களும் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தன. நான் எடுக்கும் நொடியில் அவை தலையைத் திருப்பிக்கொண்டு விடுகின்றன.
அசையாக் காட்சியைவிட அசையும் காட்சியை எடுப்பது, பெரிய சவாலாய் உள்ளது.
உங்களுக்காகவே ஒரு பதிவு போட்டாச்சு.
http://photography-in-tamil.blogspot.com/2007/08/blog-post_08.html
Post a Comment