ஒரிசாவின் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் சிவப்பு மூக்குடன் கறுப்பு அன்னத்தைக் கண்டேன்.
பாலையும் நீரையும் கலந்துவைத்தால் பாலை மட்டும் தனித்துக் குடிக்கும் திறன் உடையது என்று அன்னத்தைப் பற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால், அப்படிப் பிரிப்பதை நேரடியாக யாரேனும் பார்த்திருக்கிறார்களா?
இந்தக் கறுப்பு அன்னத்திற்கும் அந்தத் திறன் உண்டா என்பது எனக்குத் தெரியாது. இது, ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் நீந்திக்கொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sunday, August 05, 2007
கறுப்பு அன்னம் பார்த்ததுண்டா?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//பாலையும் நீரையும் கலந்துவைத்தால் பாலை மட்டும் தனித்துக் குடிக்கும் திறன் உடையது என்று அன்னத்தைப் பற்றி இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால், அப்படிப் பிரிப்பதை நேரடியாக யாரேனும் பார்த்திருக்கிறார்களா? //
ஆமாம் உண்மை தான் !
சோற்றிற்கு மற்றொரு பெயர் அண்ணம் அதை பாலும் தண்ணீரும் கலந்த நீரில் போடும் போது பாலை உறிஞ்சுவிடும் !
:)
இங்கே ஐரோப்பாவில் நிறையப் பார்க்கலாம்.
பாலும் தண்ணீரும் வெறும் டூப்..
அண்ணா,
அண்ணம் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரை விட்டுப்பாலை உண்னும் என்பதெல்லாம் கதைதான்.
பால் என்பதே நீரும், சஸ்பெண்டட் ப்ரோடீனும் என்றுதானே சொல்கிறார்கள். பாலை ஒரு colloidal solution என்றுதான் சொல்லவேண்டும். பால் திரிந்ததென்றால் இது தெளிவாகத்தெரியும். எனவே அது பால் பிரிக்கும் கதை எல்லாம் கப்சா.
உண்மையில் என்ன என்று யாரோ ஒருவர் சொன்னார், தாமரை பூக்களின் தண்டு/காம்பை உடைத்தால் அதிலிருந்து பால் போல ஒரு திரவம் வரும். அது நீருடன் கலக்காது மிதக்கும் அதை அருந்துவது அன்னத்திற்கு விருப்பம், அதை அருந்தும்போது அது நீரை விடுத்து உண்னும் என்று சொன்னார்கள்.
ஒருவேளை இதுவும் கதையாகவும் இருக்கலாம்.
கோவி.கண்ணன், உங்கள் கற்பனை சிறப்பாக இருக்கிறது.
"சோற்றிற்கு மற்றொரு பெயர் அண்ணம்"
அன்னம் என்பதே சரி; அண்ணம் என்பது வாய்க்குள் உள்ள உறுப்பு.
Deva Udeepta,
//தாமரை பூக்களின் தண்டு/காம்பை உடைத்தால் அதிலிருந்து பால் போல ஒரு திரவம் வரும். அது நீருடன் கலக்காது மிதக்கும் அதை அருந்துவது அன்னத்திற்கு விருப்பம், அதை அருந்தும்போது அது நீரை விடுத்து உண்னும் என்று சொன்னார்கள். //
இது புதிய தகவல்.
யோகன் பாரிஸ்,
ஐரோப்பாவில் பார்க்கலாம் என்பதும் எனக்குத் தகவலே. நன்றி.
Post a Comment