சென்னை வலைப்பதிவாளர் பட்டறைக்குப் போவதற்காக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கும் சாலையில் திரும்பினேன். சட்டென்று வண்டியை நிறுத்தினேன். காரணம், எதிரே கயிற்றின் மீது சிறுமி ஒருத்தி நடந்து வந்தாள்.
எட்டு வயதிருக்கும்.
நான் போன நேரம், கழைக் கூத்து முடியும் தறுவாய். விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் நடந்ததை நான் பார்க்கவில்லை; இந்தச் சிறுமி, காற்றில் நடந்ததைப் பார்த்தேன்.
சிறு அலுமினிய தட்டில் முட்டிக் கால் போட்டு, தலையில் சில சொம்புகளை அடுக்கிவைத்து, கையில் நீண்ட கழியைப் பிடித்தபடி சிறுமி லாவகமாக நடந்து வந்தாள்.
கீழே அவளின் தந்தை போல் ஒருவர், டோலக்கைத் தட்டி இசை சேர்த்துக்கொண்டிருந்தார்.
அம்மாவைப் போல் ஒருவர், சாப்பாட்டுத் தட்டைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டு, இரு குச்சிகளால் தட்டி அவரால் முடிந்த அளவுக்கு இசை கூட்டினார்.
தரையில் ஒரு விரிப்பு இருந்தது. அதில் சில சில்லறைகள். அம்மா, அவ்வப்போது சில்லறைகளை எடுத்துக்கொண்டிருந்தாள்.
போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால், மக்கள் சற்று தள்ளி சாலையின் எதிர்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.
கயிற்று நடை முடிந்ததும் சிறுமி ஒரு தட்டினை எடுத்துக்கொண்டு வந்து சன்மானம் பெற வந்தாள். அவள் நிகழ்த்தியது ஒரு கலை; எனவே அது சன்மானம்தான். ஆயினும் ஒரு கலை வித்தகி, தட்டேந்தி வந்தது, துயர்மிகு காட்சியாகக் கண் முன்னே நிற்கிறது.
Sunday, August 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அந்தோ பரிதாபம்!
ஒரு சாண் வயிற்றை வளர்ப்பதற்கு உயிருடன் போராடும் பிழைப்பு. (-:
மனதை பிழிந்த பதிவு.
பள்ளிக்கு சென்று படிக்கவேணடிய வயதில், சக மாணவ மாணவிகளோடு குதூகலமாக பழகி வாழ்க்கையின் அஸ்திவாரத்தை மகிழ்ச்சியுடன் அமைக்க இந்த வயதில் இப்படி ஒரு கொடுமை.
பெற்ற பிள்ளையை வைத்தே பிழைப்பு நடத்த உந்தப் பட்டிருக்கும் இது போன்ற பெற்றோர்கள் இருப்பதற்கு அரசாங்கமும், மதங்களும், சாதிகளும், ஆதிக்க வர்க்கங்களும்தான் காரணம். இதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
மூளைகள் உற்பத்தி மற்றும் மூளைகள் ஏற்றுமதிகளுள் முதலிடம் வகிக்கும் இந்தியா இது போன்ற பாவச் செயல்களை தடுத்து நிறுத்த என்ன செய்யப் போகிறது? பொது நல சங்கங்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் இவைகள் எல்லாம் எதற்கு?
படங்களுக்கு நன்றி அண்ணாகண்ணன்.
நீங்களே அம்மா ,அப்பா போல என்று சொல்வதிலிருந்தே உண்மையை நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இவர்கள் எல்லாம் ராஜஸ்தான் , பிகார் போன்ற மானிலங்களில் இருந்து வருகிறார்கள் என நினைக்கிறேன், அந்த குழந்தைகளை அங்கு இருத்து வாடகைக்கு எடுது வந்து பயிற்சி அளித்து இப்படி செய்கிறார்கள். ஏன் எனில் சின்ன குழந்தையாக இருக்கும் வரை தான் தொழில் நடக்கும் பெரியவர் ஆகிவிட்டால் இவர்களை விட்டு விட்டு வேறு குழந்தை புடித்துக்கொள்வார்கள்.
அடிக்கடி ஒரே வயதொத்த சின்ன குழந்தைகளை சொந்தமாக பெற்றுக்கொள்ளவா முடியும்!அந்த குழந்தை தான் உண்மையில் பரிதாபம்!
அவர்கள் நிலை பரிதாபம் தான் , ஆனால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதே தொழிலையே செயிறார்கள். நீங்கள் தாரளமாக உதவி செய்துள்ளீர்கள் போல , தட்டுடன் ரூபாயும் தெரிகிறது!
மேலும் இவர்களை பல கொள்ளைகூட்டங்களுகு உளவும் பார்த்து சொல்வதுண்டு என கேள்விப்பட்டுள்ளேன். எந்த வீடு பூட்டி கிடக்கிறது எங்கே பாதுகாப்பு குறைவு போன்று தகவல் தருவதே இது போன்ரவர்கள் தான் எனக்காவல் துறையில் உள்ள ஒருவர் சொன்னார். எல்லோரும் அப்படியா எனத்தெரியவில்லை.
'வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கிவந்தா
அப்புறம்தாண்டா சோறு.'
ஏழ்மையை இப்போதைக்கு
ஒழிப்பாங்கன்னு தெரியலை(-:
அடக் கொடுமையே.
வவ்வால் சொல்ற மாதிரி எல்லாரும் அப்படி கெட்டவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.
ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசில், இதெல்லாம் ரொம்ப கொடும சார்.
வயிறு இயக்க
வறுமை இசைக்க..
கயிறாய் வாழ்க்கை
காலமே சாட்சி!
துயரம் சூழ
துன்பமே வந்தாலும்
உயர்வாய் நம்பிக்கை
'உள்ள'ங்கையில்!
Post a Comment