Saturday, August 18, 2007
ஒரிசாவில் ஒரு குரங்குக் கூட்டம்
ஒரிசாவில் நந்தன் கனான் விலங்கியல் பூங்காவில் ஒரு குரங்குக் கூட்டத்தைக் கண்டேன். அதில் ஒன்று, ஒரு பாட்டியின் கையில் இருந்த நொறுக்குத் தீனியைப் பிடுங்கித் தின்றது.
அதனுடன் மேலும் பல குரங்குகளும் சேர்ந்துகொண்டு உண்டன.
மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு தனிக் குரங்கு
பூரி ஜெகந்நாதர் கோயிலிலும் இதே போன்ற ஒரு பறிப்புச் சம்பவம் நடந்தது. மூதாட்டி ஒருவர் கையில் இருந்த தேங்காய் மூடி, வாழைப் பழத்தை ஒரு குரங்கு திடீரெனப் பிடுங்கியது. அந்த அம்மாவும் அதைக் கொடுத்துவிட்டு, பேசாமல் சென்றுவிட்டார்.
காசியிலும் நிறைய குரங்குகளைப் பார்க்க முடிந்தது.
இந்தக் குரங்குகளை வைத்து நான் எழுதிய கவிதையை வாசிக்க இங்கே செல்லுங்கள் >>>>
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment