சுதந்திர நாளை முன்னிட்டு, ஆகஸ்டு 14 அன்று 'பாரம்பரிய உடையில் (Ethnic dress) வாங்க' என்று சிஃபி விடுத்த அழைப்பை ஏற்று, வேட்டி - துண்டுடன் சென்றேன்.
டைடல் பூங்காவில் வேட்டி-துண்டுடன் நான் உலா வந்ததைப் பார்த்துத் திரும்பிப் பார்க்காதவர்கள் யாரும் இல்லை; சென்னை மாநகரில் இந்த உடையுடன் புறநகர் ரெயிலிலும் சென்றேன்.
இதே தோற்றத்துடன் சிஃபி நடத்திய சுதந்திர தின விழாவில் ஒரு கவிதையும் வாசித்தேன்.
நான் கவிதை வாசிப்பதைப் படம் எடுக்க முயன்ற நண்பர், புகைப்படக் குமிழுக்குப் பதிலாக ஒளிப்படக் குமிழை ழுத்திவிட்டார். அதில் 7 நொடிகளுக்கு ஓர் ஒளிப்படம் பதிவானது. அதையும் இங்கே இட்டுள்ளேன்.
வேட்டியில் சில வசதிகளும் வசதிக் குறைவுகளும் இருக்கின்றன. முக்கியமானது, அதில் பைகள் இல்லை. சாதாரண முழுக் கால் சட்டையில் 3 பைகள் உண்டு. அதில் என் பணப் பை, சீப்பு, கைக்குட்டை, சாவிக்கொத்து, அடையாள அட்டை... உள்ளிட்டவற்றை வைப்பது வழக்கம். செல்பேசியை இடுப்பில் செருகி வைப்பேன். வேட்டியில் இவற்றை வைக்க இயலாமல், சட்டையிலும் கைப்பையிலுமாக வைத்தேன். மற்றபடி காற்றோட்டமாக இருப்பது உண்மை.
வேட்டிகள் பெரும்பாலும் வெள்ளையாக இருப்பதால், அவை அழுக்காகும் வாய்ப்புகளும் அதிகம். எளிதில் அவிழ்ந்துகொள்ளும் ஆபத்தும் உண்டு. அதுவும் கூட்ட நெரிசலில்..? இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் என்ன தான் தீர்வு?
Wednesday, August 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எதுக்கும் தயாராக இருக்கவும்,ஏதோ ஒரு படக்கம்பெனி வீட்டு கதவை தட்டப்போகிறது.
:-))
வேட்டி துண்டு நல்லாவே இருக்கு.
இனி நாங்களும் 'புடவையில் நான்'ன்னு போட ஐடியா கொடுத்ததுக்கு நன்றி:-))))
ச்சும்மா..........:-))))))
அண்ணா,
வேட்டி சட்டையும் உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது :)
நீங்க சொன்னது போல நம் உடமைகளை வைக்கத்தான் வேட்டியில் வசதியில்லை :(
ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் அவிழ்ந்து விழும் என்றெல்லாம் அச்சப்பட தேவையில்லை. நன்றாக நம்மோடு ஒட்டிக்கொள்ளும் :)
பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com
Post a Comment