
ஹெளரா பாலம் கட்டப்பட்டுள்ள ஹூக்ளி நதியில் 25.4.2007 அன்று படகுப் பயணம் மேற்கொண்டோம். ஹூக்ளி, அகன்று விரிந்து வேகத்துடன் காட்சி தருகிறது. அதில் பலரும் குளித்து, துணிகள் துவைத்துச் செல்கிறார்கள். சிறுவர்கள் ஓடிவந்து, உயரத்திலிருந்து குதித்துத் துளையம் அடித்து விளையாடுகிறார்கள். இத்தகைய நதியோர மகிழ்ச்சி, பெரும்பாலும் கிராமப்புற, இடைநிலை நகர மக்களுக்கே வாய்க்கிற நிலை மாறி, மாநகரமான கொல்கத்தாவின் எல்லையில் மக்கள் இன்புறுவதைக் கண்டேன். சென்னையின் கூவமும் இப்படி மாறினால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் பிறந்தது.
ஹூக்ளி ஆற்றின் கரையோரம்

சிலர் குளிக்கிறார்கள்


இது போன்ற படகு ஒன்றில்தான் நாங்கள் சென்றோம்.

படகில் நானும் என் அம்மாவும்

படகு, கரையில் கட்டப்பட்ட போது படகுக்கும் கரைக்கும் இடையே சலசலத்து ஓடிய நீர்

படகில் என் அம்மா, அப்பா, அத்தைகள்

படகில் நான்



No comments:
Post a Comment