
இல்லச் சகோதரிகள் அன்புடன் வரவேற்றனர்.

அன்னையின் கல்லறையைக் கண்டு வணங்கினேன். அணையா விளக்குடனும் அழகிய மலர்களுடனும் குளிர்ச்சியான பளிங்குப் பேழையில் அவர் துயில் கொண்டிருந்தார்.


அன்னையின் திருவுருவச் சிலை, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்தது.


விடை பெறும்போது அன்னை தெரேசாவைப் பற்றிய சில அறிமுக ஏடுகளைக் கையளித்தனர்; கூடவே ஒரு டாலரையும் அன்பளிப்பாய் வழங்கினர்.

என்னால் இயன்ற தொகையை நன்கொடையாய்க் கொடுத்தேன்.
மேலே கல்லறை அருகே நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார். அன்னையின் சிலையருகே நான் இருக்கும் படத்தை என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார். வாயிற்பலகைப் படத்தையும் என் அம்மா படத்தையும் கல்லறைப் படத்தையும் நான் எடுத்தேன்.
மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ் என்ற அமைப்பின் இப்போதைய தலைமைச் சேவகர் சகோதரி நிர்மலாவைச் சந்திக்க முயன்றேன்; ஆயினும் நேரப் பற்றாக்குறை காரணமாக உடனே கிளம்பும்படி ஆயிற்று.