திருவல்லிக்கேணியில் பரபரப்பான சாலையோரத்தில் கண்ணன் தவழ்ந்துகொண்டிருந்தான்.
பல வித வடிவங்களில் புன்னகை தவழ நின்றிருந்தான்.
25 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் அவன் உங்கள் வீட்டுக்கு வரத் தயார் என்றான்.
அவற்றை விற்றுக்கொண்டிருந்த குப்பனிடம் 'வியாபாரம் எப்படி?' என்றேன். செப்.2 அன்று, கிருஷ்ண ஜெயந்திக்கு 2 நாட்கள் முந்தைய மதிய நேரம் அப்போது. 'காலையிலிருந்து கடைவிரித்துள்ளேன். இதுவரை ஒன்றுகூட விற்கவில்லை' என்றார்.
'என்ன விலைக்குக் கேட்டாலும் கொடுக்கத் தயார் என்ற நிலையில் இருக்கேன். வாங்கத்தான் ஆளில்லை' என்றார் குப்பன்.
'இவற்றை உருவாக்கியவர்கள் யார்?' என்றேன். 'தெரியாது; நாங்கள் வாங்கி விற்கிறோம்' என்றார்.
மண்ணாக இருந்து, கலைப் படைப்பாக உருவெடுத்து, தெருவோரம் காத்திருந்த அந்தத் திருவுருவங்கள், இப்போது சில வீடுகளிலாவது பூஜை அறையிலிருந்து அருள் பாலித்துக்கொண்டிருக்கலாம்.
Tuesday, September 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கண்ணன்,
பெரியவர் காட்சிப்பொருளுக்காக வைக்கவில்லை. படம் எடுத்து வந்தீர்கள் சரி. ஒரு மண் பொமையாவது அவரிடம் வாங்கி வயிற்றுப்பாட்டுக்கு உதவினீர்களா ?
சும்மா ஆவலாகத்தான் கேட்கிறேன்.
தவறாக நினைக்காதீர்கள் !
Post a Comment