
மனிதநேயம் என்ற அறச் சிந்தனையுள்ள அறக்கட்டளை, 26.08.2007 அன்று அம்பத்தூர் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 196ஆவது மாணவர் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தியது.


அந்த நிகழ்வுக்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது.


இதே அமைப்பு, முன்பு அம்பத்தூர் தமிழ் இலக்கியப் பேரவை என்ற பெயரில் இயங்கி வந்தது.

இந்த அமைப்பின் சார்பாக, உதவும் உள்ளங்கள் என்ற மாத இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இந்த அமைப்பின் நிறுவனர் ஆடானை சுகுமாரின் அழைப்பை ஏற்று, நிகழ்வில் பங்கேற்றேன்.

ஒன்றாம் வகுப்பு முதல், 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவியர், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனம், நாடகம், கீபோர்டு வாசிப்பு உள்ளிட்ட பல வழிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நான், பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்து, பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

வளரும் இந்தியா, மண்ணில் வளரட்டும் மனிதநேயம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடந்தது.

பாலசுந்தரபாபு, வளையாபதி ஆகியோர், இசைப் போட்டிக்கு நடுவராக இருந்து, பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் காலேஜ் என்ற நிறுவனம், நிதியுதவி அளித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஞா.செல்வகுமார் எடுத்த சில புகைப்படங்களை இங்கே காணுங்கள்.















பி.எஸ்.எஸ். கம்ப்யூட்டர் காலேஜ் சார்பாகக் கலந்துகொண்ட அதன் மேலாளருக்கு நினைவுப் பரிசு


இந்த நிகழ்வில் பேச்சுப் போட்டிக்கு நடுவராக இருந்து, உரியவர்களைத் தேர்ந்தெடுத்து, பரிசு வழங்கியதோடு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூடியிருந்த அவையில் சிறிது நேரம் உரையாற்றினேன்.

என் சிறுவர் பாடல்கள் சிலவற்றையும் வழங்கினேன்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஒருசேர உணர முடிந்தது; அவர்களின் கலை வெளிப்பாடுகளைப் பார்த்து மகிழ முடிந்தது. மனத்திற்கு மிகுந்த நிறைவு அளிப்பதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
1 comment:
ஆஹா!!
குழந்தைகளுடன் பள்ளியில் இருந்தது போல் இருந்தது.படங்கள் அருமை.
மனித நேயம் வளரட்டும்.
Post a Comment