இந்தக் கூட்டத்தின் கவனத்தைத் திருப்பி, தங்கள் பொருள்களை வாங்க வைக்கப் பலரும் முயலுவார்கள். கைக்குட்டை, காலுறைகள், சீப்பு, ஊக்கு எனச் சில்லறைப் பொருள்கள் பலவும் அங்கு கிடைக்கும். சுரங்கத்திற்குக் கொஞ்சம் முன்னால் இந்தக் கடை இருந்தது.குழந்தைகளுக்கான கொசு வலை, அது.

இதில் என்ன வேடிக்கை என்றால், அவனுக்கு 10 - 12 வயதுக்குள்ளாகத்தான் இருக்கும். அவனே குழந்தைத்தனம் மிகுந்தவனாய் இருக்கையில் குழந்தைக்கான பொருளை அவனே விற்பது ஒரு நகை முரண்தான்.

கடும் வெயிலில் உட்கார்ந்திருந்த அவன், தன் இரு கைகளாலும் கண்ணை மட்டும் லேசாக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். வியாபாரம் மிகவும் மந்தமாய் இருந்தது. அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த அவனின் அண்ணன், சமயோசிதமாக ஒரு கொசு வலைக் கூடையைத் தன் தலைக்கு மேல் குடை போல் காட்டி அமர்ந்திருந்தான்.
மேலே நீங்கள் பார்த்த படத்தில், படத்தை எடுக்கும்போது அதில் என் நிழலும் விழுந்துள்ளது.
இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளிக்குச் சென்று படிக்கும் அந்த நாள், எந்த நாள்?
2 comments:
//இந்தக் குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளிக்குச் சென்று படிக்கும் அந்த நாள், எந்த நாள்?//
அந்த நாள் இந்திய முன்னேற்றத்தின் மிகச்சிறந்த நாளாக இருக்கும்.
உங்களுடைய பதிவில் ஏன் பின்னூட்ட மட்டறுத்தலை(Comment Moderation not enabled) செயல் படுத்தவில்லை? Any specific reason?
Post a Comment