Sunday, September 23, 2007

அன்னை தெரேசா இல்லத்தில் நான்

26.4.2007 அன்று கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரேசாவின் இல்லத்திற்குச் சென்றேன். அவரது இல்ல வாயிலில் உள்ள பலகையில் 'அவர் உள்ளே இருக்கிறார்' என்பதைக் குறிக்கும் 'IN' என்ற சொல்லைக் கண்டேன். மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இல்லச் சகோதரிகள் அன்புடன் வரவேற்றனர்.

Photo Sharing and Video Hosting at Photobucket

அன்னையின் கல்லறையைக் கண்டு வணங்கினேன். அணையா விளக்குடனும் அழகிய மலர்களுடனும் குளிர்ச்சியான பளிங்குப் பேழையில் அவர் துயில் கொண்டிருந்தார்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

அன்னையின் திருவுருவச் சிலை, நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

விடை பெறும்போது அன்னை தெரேசாவைப் பற்றிய சில அறிமுக ஏடுகளைக் கையளித்தனர்; கூடவே ஒரு டாலரையும் அன்பளிப்பாய் வழங்கினர்.

Photo Sharing and Video Hosting at Photobucket

என்னால் இயன்ற தொகையை நன்கொடையாய்க் கொடுத்தேன்.

மேலே கல்லறை அருகே நான் இருக்கும் படங்களை என் அப்பா குப்புசாமி எடுத்தார். அன்னையின் சிலையருகே நான் இருக்கும் படத்தை என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார். வாயிற்பலகைப் படத்தையும் என் அம்மா படத்தையும் கல்லறைப் படத்தையும் நான் எடுத்தேன்.

மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டீஸ் என்ற அமைப்பின் இப்போதைய தலைமைச் சேவகர் சகோதரி நிர்மலாவைச் சந்திக்க முயன்றேன்; ஆயினும் நேரப் பற்றாக்குறை காரணமாக உடனே கிளம்பும்படி ஆயிற்று.

7 comments:

சிவபாலன் said...

மிக அருமையான படங்கள்!

பகிர்வுக்கு மிக்க நன்றி!

அன்னை தெரேசா... மனத குல மாணிக்கம்!

ஜோ/Joe said...

கண்கள் பனித்தன.

மாசிலா said...

மிகவும் உணர்ச்சி பூர்வமான படங்கள் அண்ணாகண்ணன்.

அந்த அம்மையார் ஏழை எளியவர்களுக்கு நோயாளிகளுக்கு செய்த பணிவிடைகள் நம் பாரத பூமிக்கு புண்ணியத்தை தேடி கொடுத்திருக்கின்றன.

இன்னும் நிறைய அன்னை தெரசாக்கள் உலகில் அனைத்திலும் பிறக்க வேண்டும்.

படம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Veera said...

Nice pictures...

ashhoka said...

Dear friend i saw your blogs,great work thanks,i would like to meet you if ......
Ashok kannan

ambicapillai said...

pasatirukkaga engum kuzhandaigalukkaga nanum oru annaiyaga irukka virumbugiren annai terasave ungalai todarundu nanum ennal mudindha anadhai kuzhandaigalukku annaiyaga vazha aasai padugiren. en kadamai nan nandru todara vazhthungal

Unknown said...

Anand Said:
very nice pictures.