கோவையில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைப் பயனாக நண்பர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்தேன்.
அந்த வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர்.ப.அர.நக்கீரன் அவர்களைச் சந்தித்தபோது எடுத்த படம், இங்கே:
நக்கீரன், என் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சில தரவுகள் வழங்கி உதவியவர். வெளிப்படையாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர். அவருடனான என் நேர்காணலை என் ஆய்வேட்டின் பின்னிணைப்பில் இணைத்துள்ளேன்.
மாநாடு தொடங்கியது ஜூன் 23 என்றாலும், கண்காட்சி ஜூன் 24 அன்றுதான் தொடங்கியது. எனினும் ஜூன் 23 அன்றே நான் கண்காட்சி அரங்கினில் வலம் வந்தேன். தமிழ் இணையக் கண்காட்சி அரங்கில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஓர் அரங்கினை அமைத்திருந்தது. அதில் எந்த ஈகோவும் இல்லாமல் நக்கீரன் அமர்ந்திருந்தார்.
இந்தப் படங்களை எடுத்தவர்: செல்வ முரளி
Thursday, July 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment