அந்த வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவரும் மிகச் சிறந்த பேச்சாளரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான ஒளவை நடராசன் அவர்களைச் சந்தித்தேன்.
அண்மையில் பைபாஸ் அறுவைக்கு உள்ளாகி, அய்யா மீண்டு வந்துள்ளார். அந்த நிலையிலும் தமிழ் விழாக்களுக்குத் தொடர்ந்து சென்று வருகிறார்.

ஒளவை நடராசன் அவர்களின் மகனும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மொழிபெயர்ப்புப் பிரிவு இயக்குநருமான முனைவர் அருள் நடராசன் அவர்களைச் சந்தித்தேன். உடன் என் தாயார் செளந்திரவல்லி.
No comments:
Post a Comment