Tuesday, August 23, 2005
பாலகுமாரனுடன்
புகழ்மிகு புதின ஆசிரியர் பாலகுமாரன், சென்னை மயிலாப்பூரில் வி.எம். தெருவில் முன்பு இருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நண்பர் - கவிஞர் ஹாஜா கனியுடன் அவரைச் சந்திக்கச் சென்றேன். முதலில் கவிதைகளும் எழுதிய அவர், பின்னர் கதைகள் மட்டுமே எழுதினார். நாங்கள் சென்றபோது அவர், கவிதை குறித்து எதிர்மறைக் கருத்துகளைக் கொண்டிருந்தார். 'கவிதை எழுதாதீங்க; கதை எழுதிப் பாருங்க' என்றார். என் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்தபோதும் வரவில்லை. சில மாதங்களுக்கு முன் ஒருமுறை அவராகவே தொலைபேசியில் அழைத்தார். ' அமுதசுரபியில் வரும் விவாதங்கள், சிறப்பாக இருக்கின்றன' என்று பாராட்டினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment