Wednesday, August 24, 2005
கோபுலுவுடன்
அமுதசுரபி தீபாவளி மலருக்காக 2003 செப்டம்பர் / அக்டோபரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோபுலு வீட்டிற்குச் சென்றோம். ஏ.வி.எஸ். ராஜா, சந்திரமெளலி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அவரை நேர்காண வேண்டும் என்று மட்டும் சொல்லி, சந்திரமெளலியை நேர்காணப் பணித்தோம். என்ன கருவில் நேர்காணல் அமையலாம் எனக் கேட்டபோது, 'என் தீபாவளி நினைவுகள்' என்ற தலைப்பினை அளித்தேன். 'நல்ல தேர்வு' எனக் கோபுலு பாராட்டினார். நேர்காணலைச் சந்திரமெளலியிடமும் புகைப்படங்கள் எடுக்கும் பணியை உத்ராவிடமும் ஒப்படைத்துவிட்டு வந்தோம். அன்றுதான் நான் கோபுலுவை முதன்முதலில் சந்தித்தேன்.
கோபுலு அப்போதும் வலது கைச் சுணக்கத்தோடே இருந்தார். இடக்கையால் அரிதாகவே ஓவியங்கள் தீட்டினார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டதற்கு இணங்க, ஒரு கேலிச் சித்திரத்தை அடுத்த வாரத்தில் வரைந்து கொடுத்தார். அந்த நேர்காணலும் சிறப்பாகவே அமைந்தது. இந்தப் படத்தை எடுத்தவர், உத்ரா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment