Thursday, August 25, 2005

பாரதியார் சங்கத்தில் முதல் பரிசு



பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நடத்தும் பாரதியார் சங்கம், 1949இல் தொடங்கப்பெற்றது. பள்ளி நிலை முதல் கல்லூரி நிலை வரை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வருகிறார்கள். பெரும்பாலும் பாரதியின் பாடல்களிலிருந்து ஒரு வரியை அல்லது வாக்கியத்தைக் கொடுத்துப் பேசவோ, எழுதவோ தூண்டுவார்கள். 1995 & 1996 ஆம் ஆண்டுகளில் இந்தச் சங்கம் நடத்திய உடனடிக் கவிதைப் போட்டிகளில் நான் கலந்துகொண்டேன்.

முதலாண்டு மண்ணில் தெரியுது வானம் என்றும் இரண்டாம் ஆண்டு என்னைக் கவர்ந்த எழில் என்றும் தலைப்பு அளித்தார்கள். தலைப்பை அறிவித்த அரை மணி நேரத்தில் கவிதை எழுதவேண்டும். இதுதான் நிபந்தனை. இந்தத் தலைப்பில் கவிதை எழுதி, இரண்டு ஆண்டுகளும் முதல் பரிசு பெற்றேன். ஏ.வி.எம். அறக்கட்டளைப் பரிசு உள்பட முதலாண்டு பணப் பரிசிலும் நல்ல அளவில் இருந்தது.

இந்தப் படம், 1996ஆம் ஆண்டு நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற மாணவர்கள், நா. மகாலிங்கம், மூத்த வழக்கறிஞர் காந்தி உள்ளிட்டவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படம். இதில் பாரதியின் முண்டாசுக்கு முன்னால் மீசையில்லாமல் நான் இருக்கிறேன்.

No comments: