Wednesday, August 24, 2005

திருப்பூர் கிருஷ்ணனுடன்



ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு. என் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன், மயிலையில் நடந்த ஒரு கூட்டத்திற்குத் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். நான் என் நண்பர் ஹாஜா கனியுடன் சென்றிருந்தேன். நண்பர் கையில் புகைப்படக் கருவி இருந்தது. அதை அங்கிருந்த ஒருவரிடம் கொடுத்து எடுக்கச் சொன்னோம்.

இந்தப் படத்தில் இடமிருந்து வலமாக: திருப்பூர் கிருஷ்ணனின் மனைவி ஜானகி, திருப்பூர் கிருஷ்ணன், அண்ணாகண்ணன், ஹாஜா கனி, முன்னால் நிற்பவர், திருப்பூர் கிருஷ்ணன் - ஜானகி தம்பதியரின் ஒரே மகன், அரவிந்தன்.

அரவிந்தத் தத்துவத்தில் தோய்ந்து, அரவிந்த அமுதம் என்ற நூலை எழுதிய திருப்பூரார், தன் மகனுக்கு அரவிந்தன் என்றே பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

ஜீவி said...

செலவன் அரவிந்தனின் பெயர்க் காரணம் அதுவாக இருக்காது என்று\
நினைக்கிறேன்.
திரு. கிருஷ்ணனின் வழிகாட்டி, ஆசிரியர் எல்லாமுமாகிய தீபம்
நா.பார்த்தசாரதி அவர்களின் பிரசித்திபெற்ற நாவல் "குறிஞ்சிமலரின்" கதைத்தலைவன் பெயர் அரவிந்தன்.
அந்தக் காலத்தில் அந்தப் பாத்திரப் படைபின் மீது மோகித்து, பலர் தங்கள் குழந்தைகளுக்கு 'அரவிந்தன்'
என்று பெயர் வைத்தனர். திருப்பூர் கிருஷ்ணனும் நிச்சயம் அவர்களில் ஒருவராக பிற்காலத்தில் தன் மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்திருப்பார். நீங்கள் வேண்டுமானால் திருப்பூர் கிருஷணனிடம் இது பற்றிக் கேட்டுப்
பாருங்களேன்.