
அங்கு சீருடை அணிந்த மாணவ மணிகள் சுமார் 50 பேர், வெயிலில் அமர்ந்தபடி இருக்க, மாணவன் ஒருவன், மைக் முன்னே வல்லபாய் படேல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

நான் போனபோது தேசியக் கொடி ஏற்றியிருந்தார்கள். மாணவர்களின் பெற்றோர்கள், ஒரு பக்கத்து மர இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். சற்று தள்ளி, சிறு மேசையில் டிரம்ஸ் வாத்தியம் இருந்தது. மெட்ரிக் பள்ளிகள் பலவற்றில் இத்தகைய வாத்தியங்கள் மூலம், மாணவர்களை அணிவகுத்து வரச் செய்கிறார்கள். (அரசுப் பள்ளி எதிலும் இந்த டிரம்ஸை நான் பார்த்ததில்லை.)

மாணவன் பேசுகிறான்; அருகில், தேசியக் கொடியிலிருந்து உதிர்ந்த மலர்களைக் காணலாம்.

விடுதலைத் திருநாளைக் கொண்டாட, அந்தப் பள்ளியின் நுழைவாயிலில் வண்ணத் தோரணங்கள்!
1 comment:
நீங்கள் அம்பத்தூரைச் சேர்ந்தவரோ?
அப்படியென்றால் எனக்கு ஒரு
மின்ன்ஞ்சல் போடவும். nelan@rediffmail.com
நானும் அம்பத்தூர்.
இம்மறுமொழியை வெளியிடவேண்டாம்.
Post a Comment