Sunday, August 27, 2006

தேவன் போட்டி: ஆராயும் நடுவர்கள்

2005ஆம் ஆண்டு அமுதசுரபியும் அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையும் இணைந்து அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியை அறிவித்தன. அதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வந்து சேர்ந்தன. முதல்கட்டத் தேர்வுக்குப் பிறகு 12 கட்டுரைகள், இறுதிச் சுற்றில் இடம்பெற்றன.

Photobucket - Video and Image Hosting
(படத்தில் இடமிருந்து வலமாக: ராணிமைந்தன், அண்ணாகண்ணன், சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ஏ.வி.எஸ்.ராஜா)

அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர்கள் பாக்கியம் ராமசாமி, சாருகேசி, ஜே.எஸ்.ராகவன் ஆகியோரும் அமுதசுரபி சார்பில் நானும் நடுவர் குழுவில் இடம்பெற்றோம். அமுதசுரபி பதிப்பாளர் ஏ.வி.எஸ்.ராஜா வீட்டில் கூடி, பரிசுக்கு உரிய படைப்புகளைப் பரிசீலித்தோம். ராணிமைந்தன், நடுவராக அறிவிக்கப்படாவிட்டாலும் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவினார்.

Photobucket - Video and Image Hosting
(படத்தில் இடமிருந்து வலமாக: அண்ணாகண்ணன், சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ஏ.வி.எஸ்.ராஜா)


நகைச்சுவை உணர்வு, நடை, கருத்து ஆகிய அம்சங்களில் ஒவ்வொரு கட்டுரைக்கும் நடுவர்கள் தனித்தனியே மதிப்பெண் அளித்தோம். நால்வரும் கூடிக் கலந்தாலோசித்தோம். அமரர் தேவன் நினைவாக அறிவித்த போட்டி என்பதால் மிகச் சிறப்பான கட்டுரைகள் வரும்; இறுதிச் சுற்றில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நடுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மூன்று பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தோம். ஆனால், பரிசுக்கு உரியதாக எந்தக் கட்டுரையும் தேர்வு பெறவில்லை. ஆயினும் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மூன்று கட்டுரைகளை, வெளியிடுவதற்கு மட்டும் தேர்வுசெய்தோம்.

Photobucket - Video and Image Hosting

(படத்தில் இடமிருந்து வலமாக: அண்ணாகண்ணன், சாருகேசி, பாக்கியம் ராமசாமி, ஏ.வி.எஸ்.ராஜா)

வெளியிடத் தேர்வுபெற்ற படைப்புகளின் விவரத்தையும் நடுவர் குழு சார்பிலான கருத்துரையையும் இங்கு பார்க்கலாம்.

1 comment:

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே
புகைப்படங்கள் நன்றாக வந்திருக்கிறது.
ஒரு கட்டுரை கூட வெற்றிப்பெறக்கூடிய தகுதியை பெறவில்லை என்பது ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
எனக்கென்னமோ பலர் கலந்துக்கொள்ளவில்லையோ என்னும் எண்ணம் தோன்றுகிறது.
இருந்தாலும் உங்களின் பொறுப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.