
கொல்கத்தாவின் பரபரப்பான சாலைகளுக்கு நடுவே ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகள் ஓடுகின்றன. அவை நகரப் பேருந்துகளைப் போலவே, மிகவும் எளிய முறையில் இயக்கப்படுகின்றன. இதனைச் சாலையில் ஓடும் ரெயில் எனலாம்.
நானும் என் அம்மாவும்

இந்த வண்டியில் செல்வதற்கு மாதாந்தர சீசன் டிக்கெட்டு உண்டாம். வண்டிக்குள் 3 மிகப் பெரிய காற்றாடிகள் உள்ளன.


மூன்று காற்றாடிகள்


வண்டியை நடத்துநர் நிறுத்த வேண்டுமானால், ஒரு நீண்ட கயிற்றில் இணைக்கப்பட்ட மணியை இழுக்கிறார். ஓசை எழுகிறது. ஓட்டுநர் புரிந்துகொண்டு வண்டியை நிறுத்துகிறார். இன்னும் இந்த டிராம் வண்டியைப் பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றனர்.
டிராம் வண்டியை ஓட்டுநர் இயக்குகிறார்



வண்டியின் முன் கிடக்கும் தண்டவாளத்தைப் பார்த்தீர்களா?

சென்னையிலும் ஒரு காலத்தில் டிராம் வண்டிகள் ஓடியுள்ளன. இன்று உலகின் பல பகுதிகளிலும் டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. உலகிலேயே கொல்கத்தாவிலும் ஆஸ்திரேலிய நகரம் ஒன்றிலும்தான் டிராம் வண்டிகள் ஓடுகின்றன எனப் பயணி ஒருவர் சொன்னார். ஒரு பாரம்பரியச் சின்னமாக இந்த ரெயில் இன்னும் ஓடுவது, வங்க மக்களின் எளிய, அழகிய மனநிலையை எடுத்துக் காட்டுகிறது.