Sunday, August 26, 2007

டிராம் வண்டியில் பயணித்தேன்

Photo Sharing and Video Hosting at Photobucket

கொல்கத்தாவின் பரபரப்பான சாலைகளுக்கு நடுவே ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகள் ஓடுகின்றன. அவை நகரப் பேருந்துகளைப் போலவே, மிகவும் எளிய முறையில் இயக்கப்படுகின்றன. இதனைச் சாலையில் ஓடும் ரெயில் எனலாம்.

நானும் என் அம்மாவும்

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த வண்டியில் செல்வதற்கு மாதாந்தர சீசன் டிக்கெட்டு உண்டாம். வண்டிக்குள் 3 மிகப் பெரிய காற்றாடிகள் உள்ளன.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

மூன்று காற்றாடிகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வண்டியை நடத்துநர் நிறுத்த வேண்டுமானால், ஒரு நீண்ட கயிற்றில் இணைக்கப்பட்ட மணியை இழுக்கிறார். ஓசை எழுகிறது. ஓட்டுநர் புரிந்துகொண்டு வண்டியை நிறுத்துகிறார். இன்னும் இந்த டிராம் வண்டியைப் பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றனர்.

டிராம் வண்டியை ஓட்டுநர் இயக்குகிறார்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வண்டியின் முன் கிடக்கும் தண்டவாளத்தைப் பார்த்தீர்களா?

Photo Sharing and Video Hosting at Photobucket

சென்னையிலும் ஒரு காலத்தில் டிராம் வண்டிகள் ஓடியுள்ளன. இன்று உலகின் பல பகுதிகளிலும் டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. உலகிலேயே கொல்கத்தாவிலும் ஆஸ்திரேலிய நகரம் ஒன்றிலும்தான் டிராம் வண்டிகள் ஓடுகின்றன எனப் பயணி ஒருவர் சொன்னார். ஒரு பாரம்பரியச் சின்னமாக இந்த ரெயில் இன்னும் ஓடுவது, வங்க மக்களின் எளிய, அழகிய மனநிலையை எடுத்துக் காட்டுகிறது.

4 comments:

கோவி.கண்ணன் said...

டிரம் வன்டிக்கு வெளியேவும் ஒரு படம் (முழுவன்டி) படம் கிடைக்கலையா கண்ணன் சார் ?

மற்ற படங்கள் நல்லா இருந்தது

வெத்து வேட்டு said...

trams are used widely in europe.
in Canada too Trams are coming back.
Toronto Transit's trams are classic..
now trams are called light rail and they are expected to solve big metropolitans traffic problems..trams(electric) are enviornmentally friendly and the capacity is high..initial cost is also high...
but trams are always a better choice,,you should also have taken a full picture of a kolkotan tram

தறுதலை said...

//ஆஸ்திரேலிய நகரம் ஒன்றிலும்தான் டிராம் வண்டிகள் ஓடுகின்றன//

மெல்பர்ன்

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

ஆதிபகவன் said...

//உலகிலேயே கொல்கத்தாவிலும் ஆஸ்திரேலிய நகரம் ஒன்றிலும்தான் டிராம் வண்டிகள் ஓடுகின்றன//

கனடா,டொரான்டோவில் Street Car என்ற பெயரில் டிராம் வண்டிகள் ஓடுகின்றது. மிக அழகாக இருக்கும்.