Saturday, June 16, 2007

யோக புத்தரும் நிர்வாண மங்கையும்

காத்மண்டுவில் ஒரு கலைப் பொருள் கடையில் இந்தச் சிற்பத்தைக் கண்டேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

விற்பனையாளரிடம் இதன் தத்துவம் என்ன எனக் கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை.

பிறகு நானாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தேன்.

ஆசையைத் துறந்தவர் புத்தர். இப்படிப் பருவச் செழிப்புள்ள ஒரு நிர்வாண மங்கை அவரைத் தானே வலிய வந்து கட்டி அணைத்தாலும் அவர் தன் யோகத்திலிருந்து கவனம் கலைய மாட்டார் என அவரின் தவ வலிமையை உணர்த்துவதற்காக இப்படிச் செதுக்கியிருப்பார்கள் என எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

5 comments:

துளசி கோபால் said...

சிலையை வாங்குனீரா, இல்லையா?

முனைவர் அண்ணாகண்ணன் said...

விலை கட்டாததால் சிலையை வாங்கவில்லை; படம் எடுத்ததோடு சரி.

Anonymous said...

நீங்கள் சொல்வது போல் புத்தரின் தவ வலிமையைக் காட்டும் சிலை என்று தான் நினைக்கிறேன். இந்த பக்கத்தில் புத்தரை மயக்கும் பெண்கள் பற்றி கூறப்பட்டிருப்பதை பார்க்கவும்.

எண்கோணம் [18222036756861491748] said...

This is the sculpture of Vajrayana buddhism.

In the later days of Siddhartha the buddha, tantrism practiced in Hinduism started permeating buddhism. The Vajrayana rituals adhere to sex as a spiritual means, buddha has not accepted it. However, there are many buddhas (enlightened beings) came from Vajrayana buddhism as well.

The sculpture you have posted is the union between cakra samvara (male) and vajravarahi (the female).

Sex is spiritual, in all its varieties. So, sex is not only normal, but something one must practice - according to the vajrayana tantraism, and hinduism.

G.Ragavan said...

புத்தர் ஆலமரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் பொழுது அவரது தவத்தைக் கலைக்க மோகம், மதம், மாச்சர்யம், இப்பிடி எல்லாம் வந்துச்சாம்....தவங்குறது சிந்தனையை ஒடுக்குறது. அந்தத் சிந்தனையைக் கலைக்க இந்தச் சிந்தனைகள் வந்தா...தவம் போயிரும்ல. ஆனா...அத்தனை சிந்தனை வந்தாலும் அவர் தவமிருந்தாராம். அதத்தான் காலப் போக்குல சொல்லும் போது..தவமிருந்தாரு...அப்சரஸ் வந்தா....அங்க தொட்டு இங்க தொட்டுத் தடவுனா...ஆனாலும் புத்தரு தவத்துல இருந்தாருன்னு சொல்லீட்டாங்க. அதைச் சொல்லும் சிற்பந்தான் இது. புத்தருடைய பதும ஆசனம் மாறாம இருக்கு பாருங்க.